இன்று வரைப் பார்த்தால் உலகில் அதிகமானோரால் விளையாடப்படும் கேமாக பப்ஜி (PUPG) மற்றும் போர்ட் நைட் (Fortnite) கேம்கள் உள்ளன. இன்று வரை இவர்கள் தான் கேமிங் உலகை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். அதிலும் சென்ற வருடம் பப்ஜி மற்றும் போர்ட் நைட் கேம்கள், கேமிங் உலகிலேயே மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கியது என்பது தான் உண்மை.

இவ்வற்றிக்கு போட்டியாக எவ்வளவோ கேம்கள் அதன் பின் அறிமுகமானாலும் பப்ஜி மற்றும் போர்ட் நைட் கேம்கள் அடைந்த நிலையை அடைய முடியவில்லை, ஆனால் இதெற்கெல்லாம் சேர்த்து இப்பொழுது ஒரு புதிய கேம் அறிமுகமாகியுள்ளது. இதன் பெயர் அபெக்ஸ் லெஜண்ட்ஸ் (Apex Legend).

அபெக்ஸ் லெஜண்ட்ஸ் என்ற இந்த கேம் கேம்பிரியர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுப்பதினால், அறிமுகமான 3 நாட்களில் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இதனை டவுன்லோடு செய்துள்ளனர். மேலும் இந்த கேமை அறிமுகம் செய்தவர்கள், கேமிங் உலகையே கலக்கி கொண்டிருக்கும் நாம் யாவரும் அறிந்த இஏ (Electronic Arts-EA) மற்றும் ரிஸ்பான் எண்டெர்டெயின்மென்ட் (Respawn Entertainment) நிறுவனத்தினர். இவர்களின் இணைவுதான் இதனை சாத்தியமாகியுள்ளது.

ஆனால் சிறிய ஏமாற்றம் இது தற்போது பிளே ஸ்டேஷன் 4 (PS4), மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் ஒன் (Xbox One) மற்றும் கணினிகளுக்கு என பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் வளர்ச்சியால் பப்ஜி மற்றும் போர்ட்நைட் கேம்கள் போன்று ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்காக இந்த கேம் எப்போது மொபைல் போன்களுக்கு என அறிமுகப்படுத்தப் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகமாக உள்ளது.

பிளே ஸ்டேஷன் 4 (PS4) மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஒன் போன்றவற்றை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, மொபைல் போனை பயன்படுத்தி வீடியோ கேம் விளையாடுபவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது இது மிகக் குறைவுதான். ஒருவேளை இந்த அபெக்ஸ் லெஜண்ட்ஸ் கேம் மொபைல்களில் அறிமுகப்படுத்தப்பட்டால் கண்டிப்பாக பல சாதனைகளை புரியப்போகிறது. பப்ஜி, போர்ட்நைட் போன்ற கேம்கள் கதற போகின்றன.

பிளே ஸ்டேஷன் 4 (PS4) மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஒன் போன்றவை இல்லாதவர்கள் நீங்கள் இந்த கேம் மொபைலில் வரும்வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்மில் பலர் கணினி பயன்படுத்துவோம். எனவே இந்த கேமினை எவ்வாறு கணினியில் டவுன்லோடு செய்வது என்பதற்கான வழிமுறையினை பார்ப்போம்.

அபெக்ஸ் லெஜண்ட்ஸ் கேமினை எவ்வாறு டவுன்லோட் செய்வது

இதற்கு முதலில் இஏ (Electronic Arts-EA) வின் வலைப்பக்கத்திற்கு சென்று உங்களின் விவரங்களை உள்ளிட்டு ஒரு கணக்கு துவங்கி கொள்ள வேண்டும். வலைப்பக்கத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்யவும்.

Apex Legends for PC-Origin

அடுத்து Electronic Arts வின் Origin Client-ஐ உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.

இதன் பின் இதில் Apex Legends என்று தேடவும். அவ்வளவுதான் இதில் அபெக்ஸ் லெஜண்ட்ஸ் கேமிற்கான டவுன்லோட் பட்டன் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை கிளிக் செய்து டவுன்லோட் பண்ணி கொள்ளவும். இனிமேல் இதனை உங்கள் கணினியில் நீங்களும் விளையாடலாம்.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்