தேசிய அடையாள அட்டை ஆணையம், ஆதார் அடையாள அட்டையை மொபைல் எண்ணுடன் இணைப்பதை கட்டாயம் ஆக்கியுள்ளது. இதனால் நீங்கள் ஆதார் அடையாள அட்டையை மொபைல் எண்ணுடன் இணைப்பதற்கு எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை, இருந்த இடத்தில் இருந்து கொண்டே ஆதார் அடையாள அட்டையை மொபைல் எண்ணுடன் இணைக்க முடியும், இதற்காகவே சிறப்பாக இலவச வாடிக்கையாளர் சேவை எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்திக் கொள்ள பிஎஸ்என்எல், ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்கள் 14546 என்ற இலவச எண்ணிற்கு அழைக்க வேண்டும். இதன் மூலம் ஆதார் அடையாள அட்டையை இருக்கும் இடத்தில் இருந்தே கொண்டே மொபைல் நம்பருடன் இணைக்கமுடியும்.

ஆதார் அடையாள அட்டையை மொபைல் எண்ணுடன் இணைப்பதற்கான வழிமுறைகள்

  1. உங்களின் ஆதார் அடையாள அட்டையை கையில் எடுத்துக் கொள்ளுங்கள்.
  2. அடுத்து 14546 என்ற இலவச எண்ணிற்கு அழையுங்கள்.
  3. இது நம்முடைய மொபைல் எண்ணை சரிபார்க்க நம்மிடம் ஒப்புதல் கேட்கும், எண் 1ஐ அழுத்தி, உங்கள் மொபைல் எண்ணை உறுதிச் செய்துக் கொள்ளவும்.
  4. அடுத்து நம்முடைய 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட கேட்கும், இதனை எவ்வித பிழையும் இல்லாமல் பொறுமையாக உள்ளிடவும்.
  5. இதனை தொடர்ந்து தற்போது ஆதாருடன் இணைக்கப்பட்ட நம்முடைய மொபைல் எண்ணுக்கு 6 இலக்க OTP எண் வரும். அதைனை சரியாக உள்ளீடு செய்ய வேண்டும்.
  6. அடுத்து உங்களின் விவரங்களைச் சரிபார்க்க சில நொடிகள் ஆகும் என்பதால் பொறுமையாக காத்திருக்கவும்.
  7. அவ்வளவுதான், அடுத்த 48 மணி நேரத்தில் ஆதாருடன் மொபைல் எண் இணைக்கப்பட்டது என்ற தகவல் உங்களுக்கு குறுஞ்செய்தி வழியாக உறுதி செய்யப்படும்.

இந்த முறையின் மூலம் ஆதாரை மொபைல் எண்ணுடன் இணைப்பதால், கைரேகை எதுவும் அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்