ஆதார் அட்டை தற்போது மத்திய, மாநில அரசின் சேவை அல்லது சலுகைகளைப் பெற கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது, குறிப்பாக ஆதார் அட்டை சமையல் எரிவாயு இணைப்பு பெற, உர மானியம் பெற, செல்போன் இணைப்பு பெற, முதியயோர் ஓய்வூதியம் பெற மற்றும் இது போன்ற எண்ணற்ற சேவைக்களுக்காக தற்போது பயன்படுத்தப்படுகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் நிறைந்த ஆதார் அட்டையை நீங்கள் வீட்டிலிருந்தப்படியே டவுன்லோட் செய்து கொள்ள முடியும். ஆனால் இதனை நீங்கள் டவுன்லோட் செய்ய ஆதார் அட்டைக்கான விண்ணப்பம் ஒப்புதல் பெற்றிருத்தல் வேண்டும்.

மேலும் ஆதார் அட்டையை நாம் டவுன்லோட் செய்வதற்கு சில அடிப்படை விவரங்கள் தேவை. அவை பின்வருமாறு.

முதலில் பதிவு ஐடி அல்லது ஆதார் எண் தெரிந்திருக்க வேண்டும். அல்லது ரசீதில் (Acknowledgement slip) உள்ள படி முழுப் பெயர், அஞ்சல் குறியீடு எண் மற்றும் நீங்கள் பதிவு செய்த உங்களின் மொபைல் எண் உள்ளிட்ட விவரங்கள் தேவை.

சரி, ஆதார் அட்டை பதிவிறக்கம் குறித்த வழிமுறைகளை இக்கட்டுரையில் வரிசையாக காண்போம்.

முதலில் https://eaadhaar.uidai.gov.in என்ற வலைத்தளத்திற்கு செல்க.

இதில் உங்களின் 14 இலக்க ஆதார் பதிவு எண்ணை உள்ளிடவும் (Enter 14 digit ENO) மற்றும் ஆதார் ஏற்றுகொள்ளல் ரசீதில் இருந்த 14 இலக்க தேதி, நேரம் குறித்த எண்ணையும் உள்ளிடவும் (Date-Time stamp printed on the Enrolment Slip).

பின் இப்பக்கத்தில் உள்ள உங்களின் விவரங்களை உள்ளிடவும். Full Name மற்றும் உங்களின் Pin Code தகவல்கள். இறுதியாக கேப்ட்ச்சாவை (captcha) நிரப்பவும்.

அடுத்து, நீங்கள் கொடுத்த தகவல்கள் சரியாக இருந்தால், உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும், அதனை அதற்கான பெட்டியில் பூர்த்தி செய்யவும். இதன்பின் இது உங்களை அடுத்தப் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும்.

இதில் நீங்கள் உங்கள் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இது உங்களுக்கு தற்போது PDF பைளாக கிடைக்கும்.

மேலும் டவுன்லோட் செய்யப்பட்ட ஆதார் அட்டையை திறக்க உங்களின் அஞ்சல் குறியீடு எண் தான் பாஸ்வேர்ட், இதனை பயன்படுத்தி நீங்கள் உங்களின் ஆதார் அட்டையை திறந்துக் கொள்ளலாம்.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், கண்டிப்பாக உங்களில் பெரும்பாலானோருக்கு இந்த வழிமுறைகள் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு, நீங்கள் தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா உங்கள் நண்பர்களும் உங்களின் பெற்றோருக்கும் இதனை தெரியப்படுத்த கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து அவர்களுக்கு இதனை வாட்ஸாப் மூலமாகவோ அல்லது பேஸ்புக் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்