தொடக்கத்தில் ஸ்னாப்சாட் செயலியில் இருந்த சிறப்பு அம்சமான ஸ்டோரிஸை இன்ஸ்டாகிராம் தனது செயலியிலும் அறிமுகப்படுத்தியது, இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் அவ்வற்றின் பயன்பாடு ஸ்னாப்சாட்டை முந்திவிட்டன. குறிப்பாக இன்று நாற்பது கோடிக்கும் அதிகமான மக்கள் இன்ஸ்டாகிராமில் மட்டும் ஸ்டோரிஸை பயன்படுத்துகின்றனர்.

இதில் 15 விநாடிக்கான வீடியோக்களையும் மற்றும் புகைப்படங்களையும் நீங்கள் பகிரலாம், இவை 24 மணி நேரத்துக்கு பிறகு தானாக நீக்கப்பட்டு விடும். இதில் நீங்கள் உங்களின் ஸ்டோரிஸை உங்களை பின்தொடர்பவர்களுடனும் மற்றும் உங்களின் நெருங்கிய நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம். இது அப்படியே வாட்ஸாப்பில் நாம் பயன்படுத்தும் ஸ்டேட்டஸ் போன்றதுதான்.

கூடுதல் தகவல்:- வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் டவுன்லோட் செய்வது எப்படி

மேலும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதால், நீங்கள் உங்களின் பேஸ்புக் கணக்கை உங்களின் இன்ஸ்டாகிராம் கணக்குடன் இணைத்திருந்தால், எளிதாக உங்களின் இன்ஸ்டாகிராமின் ஸ்டோரிஸை பேஸ்புக்கின் ஸ்டோரிகளில் பகிர முடியும்.

சரி இதெல்லாம் உங்களில் பெரும்பாலோனருக்கு தெரிந்ததுதான், நாம் இந்த கட்டுரையில் நீங்கள் வேறு ஒருவரின் ஸ்டோரிஸை எவ்வாறு டவுன்லோட் செய்வது என்பதை குறித்து காண்போம். இதற்கு நாம் மூன்றாம் தரப்பு செயலிகளை (Third-party app) பயன்படுத்த வேண்டும். இவற்றின் மூலம் எளிதாக வேறு ஒருவர் பகிர்ந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை டவுன்லோடு செய்ய முடியும்.

இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளை டவுன்லோட் செய்வதற்கான வழிமுறைகள்

முதலில் ஆண்ட்ராய்டு மொபைல் போன் பயன்படுத்துவோர், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இலவசமாக கிடைக்கும் Story Saver என்ற ஆப்பினை டவுன்லோட் செய்து உங்கள் மொபைலில் நிறுவிக் கொள்ள வேண்டும்.

Download – Story Saver for Instagram – Apps on Google Play

அடுத்து இதில் உங்களின் இன்ஸ்டாகிராம் username மற்றும் password-யினை உள்ளிட்டு லாகின் செய்து கொள்ளவும்.

லாகின் செய்த பின், இதில் நீங்கள் உங்கள் நண்பர்கள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஸ்டோரிஸைப் பார்க்கலாம். இது தவிர்த்து இதில் உள்ள search bar-இல் நீங்கள் விரும்பும், நீங்கள் பின்தொடராத நண்பர்களை சர்ச் (search) செய்வதன் மூலம் அவர்களின் ஸ்டோரிகளைக் கூட நீங்கள் பார்க்கலாம் மற்றும் டவுன்லோட் செய்யலாம்.

அடுத்து நீங்கள் விரும்பும் உங்கள் நண்பரின் புகைப்படம் அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுத்து, இதில் உள்ள SAVE என்ற பாட்டனை தட்டவும். அவ்வளவுதான் நீங்கள் விரும்பிய புகைப்படம் உங்களின் கேலரியில் டவுன்லோட் செய்யப்பட்டது. மேலும் இதில் Repost மற்றும் Share போன்ற ஆப்ஷன்களும் உள்ளன.

இன்ஸ்டாகிராம் வீடியோக்களை டவுன்லோட் செய்வது சரியா ! தவறா !

இன்ஸ்டாகிராம் வீடியோக்களை பதிவிறக்க மூன்றாம் தரப்பு பயன்பாடுகளைப் பயன்படுத்துவது இன்ஸ்டாகிராமின் சேவை விதிமுறைகளுக்கு எதிரானதே.மேலும் ஒருவரின் படைப்பினை திருடுவதும் குற்றம் தான்.

எனினும், இந்த வழிமுறைகளை பயன்படுத்தி வீடியோக்களை டவுன்லோட் செய்ய முடியும் என்பதை தெரிவிப்பதற்கே நாங்கள் இங்கு குறிப்பிட்டுள்ளோம், இதனை பயன்படுத்துவது உங்களின் தனிப்பட்ட விருப்பம். இதற்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா உங்கள் நண்பர்களும் இதனை தெரியப்படுத்த கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து அவர்களுக்கு இதனை வாட்ஸாப் மூலமாகவோ அல்லது பேஸ்புக் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்