தற்போது சமூகத்தில் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது, எனவே மக்களை ஆபத்திலிருந்து விரைவான முறையில் பாதுகாக்க, தமிழ்நாடு காவல்துறை “காவலன்-SOS’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நிகழ்வுகள் பற்றிய அனைத்து விவரங்களும் விரைவான முறையில் இணையதள வசதி மூலமாக அதிகாரிகளுக்கு உரியநேரத்தில் அனுப்பிவைக்கப்படும். இதனால் காவல் துறையினரால் உடனடியாக உதவி புரிய முடியும்.

காவலன்-SOS எவ்வாறு வேலை செய்கிறது

காவலன்-SOS, பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பாதுகாப்புச் செயலியாகும். இதனை உங்களின் அவசர தேவைகளின் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

அப்பொழுது இது நீங்கள் தற்போது இருக்கும் இருப்பிடம் குறித்த தகவலுடன் எச்சரிக்கை செய்தியினை குறுஞ்செய்தியாக காவல் தலைமைக் கட்டுப்பாட்டு அறைக்கும் மற்றும் நீங்கள் இந்த செயலியில் பதிவு செய்துள்ள உங்களின் மூன்று உறவினர்களுக்கும் அல்லது உங்களின் நண்பர்கள் எண்ணிற்கு தகவல் அனுப்பும்.

காவலன்-SOS உள்ள சிறப்பு அம்சங்கள்

உங்களின் அவசர உதவிக்கு இதில் உள்ள SOS என்ற பட்டனை தொட்டாலே போதுமானது. இதனால் அழைப்பவரின் இருப்பிடம் குறித்த தகவல் உடனே GPS மூலம் கண்டறியப்படும்.

அடுத்து அழைப்பவரை நொடிப்பொழுதும் கண்காணிக்கும் Real Time Tracking வசதி இதில் உள்ளது.

காவலன் SOS பட்டனை நீங்கள் அவசர உதவிக்கு தொட்டால் உடனடியாக உங்கள் மொபைலின் GPS இயங்க ஆரம்பித்து உங்களின் மொபைல் கேமரா தானாகவே 15 வினாடிகளுக்கான ஒலி மற்றும் ஒளியுடன் கூடிய வீடியோ ஒன்றை எடுத்து அதனை காவல் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பிவிடும். இதன் மூலம் நீங்கள் எந்த இடத்தில் உள்ளீர்கள் என்ற தகவலையும் மேலும் உங்களை சுற்றியுள்ள தடயங்களை எளிதாக காவல்துறையினர் அறிந்து கொள்ள முடியும்.

ஒருவேளை நீங்கள் பயன்படுத்தும் மொபைலில் இணைய இணைப்பு இல்லாமால் இருந்தால் Auto SMS Alert மூலமாக தகவல் தெரிவிக்கப்படும். இதே நிலை தான் நெட்ஒர்க் இல்லாத நேரத்திலும் செயல்படுத்தப்படும்.

ஆங்கிலம் மற்றும் தமிழ் என இருமொழிகளை இச்செயலி ஆதரிக்கிறது. எனவே இதனை எளிதாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இதனை அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் IOS இயங்குதளத்தினைக் கொண்ட மொபைல் போன்களிலும் பயன்படுத்தலாம்.

இச்செயலியை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்யவும்.

Download Kavalan – SOS

மேலும் இதுப் போன்று KAVALAN Dial 100 என்ற செயலியை தமிழ்நாடு காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது, இதனை நீங்கள் உங்களின் மொபைலில் இன்ஸ்டால் செய்துக் கொண்டால், அவசர காலத்தில் 100 என்ற எண்ணை நீங்கள் டயல் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. நீங்கள் சற்று இந்த செயலியை தொடுவதின் மூலமாகவே மாநில காவல் தலைமைக் கட்டுப்பாட்டு அறைக்கு உங்களின் இருப்பிடம் குறித்த தகவல் சென்று விடும்.

இதனை டவுன்லோட் செய்வதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்திக்கொள்ளவும்.

Download Kavalan Dial – 100

கண்டிப்பாக தமிழ்நாடு காவல்துறையின் இந்த முயற்சி வரவேற்கக்கூடியது, நிகழும் குற்றங்களில் இருந்து நம்மை பாதுக்காக்க கண்டிப்பாக இதனை அனைவரும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்திக் கொள்ளவும். மேலும் இச்செயலி குறித்த போதுமான விழிப்புணர்வும் மக்களிடம் இல்லை எனவே இதனை உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

மேலும் இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்