சீன தொழில்நுட்ப நிறுவனமான டென்ஸெண்ட் (Tencent) அமெரிக்காவின் புகழ் பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியான Games of Thrones னை கேமாக வடிவமைத்து, அதன் சோதனை பாதிப்பை வெளியிட்டுள்ளது.

Game of Thrones: Winter is Coming என்பது கேமின் தலைப்பு, இதனை Yoozoo என்ற சீனாவின் கேம் வடிவமைப்பாளர் உருவாக்கி உள்ளார். மேலும் Tencent கேம்ஸ், சீனாவில் கேம் ஆப் த்ரோனை ஆன்லைனில் ஸ்ட்ரீமிங் செய்வதற்கான முழு உரிமையை பெற்றுள்ளது. HBO வில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அமெரிக்காவில் மட்டும் 30 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கொண்ட சீரியல் Game of Thrones என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் விளையாட்டு வீரர்கள் கேம் ஆப் த்ரோன் இல் உள்ள கதாப்பாத்திரத்தை போன்ற உருவத்தினை கொண்டுள்ளனர். அழைப்பு குறியீடுகளை (Invite codes) பெறும் பயனர்கள் வியாழக்கிழமை முதல் விளையாட்டை விளையாட தொடங்க முடியும் என டென்ஸெண்ட் தெரிவித்துள்ளது. மேலும் இந்த கேம் Game of Thrones நிகழ்ச்சியை போன்று யதார்த்தமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

கேமின் நோக்கம் இதில் வீரர்கள் கிங்ஸ் லேண்டையும் மற்றும் Iron Thron-னையும் கைப்பற்ற வேண்டும்.

யாருப்பா இந்த டென்ஸெண்ட் (Tencent)

பெரும்பாலான மக்கள் இன்னும் Tencent குறித்து அறிந்திருக்கவில்லை என்றாலும், சீன டிஜிட்டல் மீடியா மற்றும் டெலிகாம் துறையில் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது இது.

டென்ஸெண்ட் சீனாவில் QQ, WeChat மற்றும் Qzone உள்ளிட்ட மிகப்பெரிய சமூக ஊடக மற்றும் செய்தி பயன்பாடுகளை கொண்டுள்ளது. இது மட்டுமில்லாமல் டென்ஸெண்ட் தனக்கு சொந்தமாகவே ஒரு டிஜிட்டல் உதவியாளரை (Digital assistant) கொண்டுள்ளது இதன் பெயர் Xiaowei. இது அலெக்ஸாவைப் (Alexa) போன்று வானிலை மற்றும் போக்குவரத்து பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது.

சீனாவில் டென்ஸெண்ட்டின் பயன்பாடுகள் (Tencent apps) மற்றும் இணைய சேவைகளின் (web services) எண்ணிக்கை முடிவில்லாதவை. இதில் TenPay என்ற மொபைல் கட்டண முறை, Weiyun cloud storage சேவை போன்றவை குறிப்பிடத்தக்கவை மேலும் இதற்கு Tencent Pictures என்ற திரைப்பட ஸ்டூடியோ கூட உள்ளது.

மேலும் இது Riot Games (League of Legends தயாரிப்பாளர்), Supercell (Clash of Clans தயாரிப்பாளர்) போன்ற கேமிங் நிறுவனங்களைக் கைப்பற்றி உள்ளது. இது மட்டுமில்லாமல் Epic Games (Gears of War தயாரிப்பாளர்) மற்றும் Activision Blizzard நிறுவனங்களில் அதிக பங்கினை கொண்டுள்ளது.

சரி இவை எல்லாம் போதும், இனி மேல் வர போகும் டென்ஸெண்ட்டனின் கேம் ஆப் த்ரோன் கேம் எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்