நீங்கள் மலிவான விலையில் இயர்போன் (earphone) தேடுகிறாய் என்றால், உங்களுக்கான சரியான வாய்ப்பு வந்துள்ளது அது தான் Boat நிறுவனத்தின் Bassheads 225. இதன் விலை ரூபாய் 599. மேலும் இது இப்போது இந்தியாவின் அமேசான் இணையத்தளத்தில் Amazon’s Choice என்ற விருந்தினையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குறைந்த விலையில் உள்ள இயர்போன்களின் பிரிவில் Boat Bassheads 225 மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

Bassheads 225 உள்ள சிறப்பு அம்சங்கள்

இதன் டிசைன் மற்ற இயர்போன் போன்று வழக்கமானது தான். இது 1.2m நீளம் கொண்ட பிளாட் கேபிள் ஆகும். மேலும் இது சிக்கல்கள் இல்லாதவாறு tangle-free கேபிள் வசதியினை கொண்டுள்ளது. இது தவிர இதன் இன்லைன் ரிமோட்டில் மைக்ரோபோனைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த Boat Bassheads 225 இயர்போன் Black, Blue, Forest Green, Frosty White, Neon Lime, மற்றும் Red போன்ற பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான நிறங்களை தேர்வு செய்ய நிறைய விருப்பங்கள் உள்ளன.

கூடுதலாக Boat Bassheads 225 இயர்போன் ஆனது ஆறு வெவ்வேறான ear tips களை கொண்டுவருகிறது, இதன் மூலம் இந்த இயர்போனை நீங்கள் வேலை செய்யும் போதும் மற்றும் உடற்பயிற்சி செய்யும் போதும் பயன்படுத்திக்கொள்ள முடியும். கண்டிப்பாக இது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். அடுத்து இதில் உள்ள gold-plated 3.5mm headphone jack ஆனது L-shaped பிளக்கினை கொண்டு வருகிறது, எனவே இதனை எளிதாக உங்களின் சாதனங்களில் எவ்வித நெருக்கடியும் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Bassheads 225 இன் செயல்திறன்

இதன் ஆடியோ குவாலிட்டி கச்சிதம் மற்றும் இதன் பேஸ் (Bass) மிகவும் தெளிவாக உள்ளது. பேஸ் சவுண்டினை விரும்புபவர்களுக்கு இது கண்டிப்பாக திருப்பி அளிக்கும். கூடுதலாக இது EDM மற்றும் ஹிப்ஹாப் வகைகளுக்கு ஏற்றது.

சரி, இதில் உள்ள நன்மை, தீமைகளை பார்ப்போம். இதன் Build quality கண்டிப்பாக மிட்ரேஞ்சு பிரிவில் உள்ள இயர்போன்களை காட்டிலும் அதிகம் தான். அடுத்து இதன் Oversensitive மைக்ரோபோன் நாம் அழைப்புகளை செய்யும் போது நமக்கு சிறிய அளவு இரைச்சலை ஏற்படுத்துகிறது என்பதே இதில் உள்ள சிறிய குறையாக உள்ளது. மற்றப்படி இது கண்டிப்பாக அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும். இதனை இந்தியாவில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்கள் விற்பனை செய்கின்றன.

இதற்கான லிங்க் Boat Bassheads 225 at Amazon.in மற்றும் Boat Bassheads 225 at flipkart.com.

உங்களில் யாரெல்லாம் இதனை வாங்கப்போகிறீர்கள், மேலும் இந்த Boat Bassheads 225 க்கும் வேறு ஏதாவது இயர்போனுக்கும் ஒப்பிடுதல் வேண்டுமா. உங்கள் கமெண்ட்ஸ்களை எங்களுக்கு தெரிவியுங்கள்.

மேலும் இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்