ஷியோமி தன்னுடைய மொபைல் போன்கள் மற்றும் தொலைக்காட்சிகளை தவிர, வேறு பல தயாரிப்புகளையும் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு செய்து வருகிறது. சீனாவுக்கு வெளியே தற்போது இந்தியா தான் மிகப்பெரிய சந்தையாக உள்ளது என்பதை யாவரும் அறிந்ததே. இதனை பல்வேறு நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன இதில் ஷியோமியின் பங்களிப்பு மிக முக்கியமாக உள்ளது.

ஏற்கெனவே ஷியோமி மிதிவண்டிகள் தொடங்கி மேக்கப் சாதனைகள் வரை இங்கே விற்பனை செய்து வருகிறது. அதில் தற்போது புதிதாக அறிமுகமாகி உள்ளது எம்ஐ ஹோம் செக்யூரிட்டி கேமரா. ஷியோமி நிறுவனம் தற்போது இதன் பேஸிக் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கூடுதல் தகவல்:- என்ன இவை எல்லாம் ஷியோமியின் தயாரிப்புகளா

எம்ஐ ஹோம் செக்யூரிட்டி கேமராவில் உள்ள சிறப்பு அம்சங்கள்

  • 1080p வீடியோ க்ளாரிட்டி கொண்ட இந்த பாதுகாப்பு கேமராவில் 130 டிகிரி வைடு ஆங்கிள் லென்ஸ் பயன்படுத்துகிறது.
  • செயற்கை நுண்ணறிவு மற்றும் இன்ஃப்ரா ரெட் இரவு பார்வை போன்ற முக்கிய நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இதில் உள்ளன.
  • மேலும் இதில் பிக்சர் இன் பிக்சர் (Picture in Picture mode) எனப்படும் அமைப்பினை முன்னணி ஐபோன் மற்றும் அண்ட்ராய்டு மாடல் மொபைல் போன்களில் எம்ஐ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இதை நம் வீட்டின் ஓர் அறையில் பொருத்திவிட்டால், அந்த அறையை நம்முடைய ஸ்மார்ட்போன் மூலமாக எங்கிருந்து வேண்டுமானாலும் மல்டி டாஸ்கிங் அமைப்பினை பயன்படுத்தி எளிதாக கண்காணிக்க முடியும்.

இதற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட எம்ஐ ஹோம் செக்யூரிட்டி கேமரா (Mi Home Security Camera 360°) 360 டிகிரி கோணத்திலும் திரும்பும் திறன் கொண்டிருந்தது, ஆனால் தற்போது வெளியான Mi Home Security 1080P கேமரா, பேஸிக் மாடல் என்பதால் இதனால் முன்புறம் இருப்பவற்றை மட்டுமே கண்காணிக்க முடியும். எனினும் இதில் உள்ள 130 டிகிரி வைடு ஆங்கிள் லென்ஸ் ஓரளவு இதனை சரிக்கட்டிவிடும்.

எம்ஐ ஹோம் செக்யூரிட்டி பேஸிக் கேமரா மாடலின் விலை 1,999 ரூபாய் ஆகும், இதற்கு முன் அறிமுகமான எம்ஐ ஹோம் செக்யூரிட்டி கேமரா 360 டிகிரி இன் விலை 2,699 ரூபாய் ஆக உள்ளது.

இதனை யரெல்லாம் வாங்க போகிறீர்கள், இந்த செக்யூரிட்டி கேமராக்கள் நம்முடைய வீட்டிற்கு உரிய பாதுகாப்பினை அளிக்குமா, இதுக் குறித்த உங்களின் கருத்து என்ன. உங்களின் கருத்துக்களை எங்களுக்கு கமெண்ட்ஸ் மூலம் தெரிவியுங்கள்.

மேலும் இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்