ரயில் போக்குவரத்து இந்தியாவில் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது, கோடிக்கணக்கான மக்கள் ரயில் போக்குவரத்தினை நம்பி உள்ளனர், இதனை தற்போது ஜியோ நிறுவனம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி உள்ளது, ஆம் பல்வேறு துறைகளை கைக்கொண்ட ஜியோ நிறுவனம் தற்போது ரயில்வே துறை பக்கம் தனது கவனத்தை செலுத்தி உள்ளது.

ரயில் பயணத்தை மக்களுக்கு எளிமையானதாக மாற்ற ஜியோ நிறுவனம் தற்போது ஒரு புதிய ஆப்பை அறிமுகம் செய்துள்ளது, இதனால் இனி ஜியோ போன் பயன்படுத்துவோர் ரயில் டிக்கெட்களை புக் செய்வதற்கு ஐஆர்சிடிசி தளத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இனிமேல் ஜியோ போன் வாடிக்கையாளர்கள் ஜியோ ரயில் ஆப் மூலமாகவே ரயில் டிக்கெட்களை பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் இந்த ஜியோ ரயில் ஆப், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மற்றும் இதர ஆன்லைன் வாலட்டுகளையும் ஆதரிக்கிறது, இதனால் எளிதாக டிக்கெட் புக்கிங் செய்யவும் மற்றும் டிக்கெட்களை ரத்து செய்யவும் முடியும். மேலும் இதில் ரயிலின் PNR நிலையை சரிபார்த்து கொள்ளும் வசதியும் உள்ளது, இது தவிர இதில் இருக்கைகளின் எண்ணிக்கை, நேரகால அட்டவணைகள் போன்ற அனைத்தையும் நம்மால் சரிபார்த்து கொள்ள முடியும்.

ஜியோ ரயில் ஆப்பினை, ஜியோ போன் அல்லது ஜியோ போன் 2 இல் நேரடியாக ஜியோ ஸ்டோரிலிருந்தே பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் இந்த ஜியோ ரயில் ஆப்பினை பயன்படுத்த ஐஆர்சிடிசி அக்கவுண்ட் கட்டாயம், ஒருவேளை ஐஆர்சிடிசி அக்கவுண்ட் இல்லாதவர்கள் புதிதாக ஐஆர்சிடிசி-இல் அக்கவுண்ட் ஒன்றை துவங்கி கொள்ளவும்.

மேலும் இதுத் தொடர்பாக ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, ஜியோ ரயில் ஆப்பானது ஐஆர்சிடிசி மூலம் இயங்குகிறது எனவும், இனி இதில் ரயிலில் பயணத்தின் போதே உணவுகளை ஆர்டர் செய்வதற்கான வசதிகளும் கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளனர். ஜியோ இந்த அறிவிப்பு ஜியோ வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடைய செய்த்துள்ளது.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்