கட்டுப்பாடுகள் இல்லாமல் செயல்படும் டிக்டாக் செயலியால் இளைய தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். இதனால் டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் தமிழகத்தில் பரவலாக உள்ளது.

தொடக்கத்தில் இளைஞர்கள் டிக்டாக் செயலியை தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்காக பயன்படுத்தினர். எடுத்துக்காட்டுக்கு சினிமா பாட்டுக்கு ஆடுவது, டப்மேஷ் செய்வது, சினிமா வசனங்களைப் பேசுவது என இதுப் போன்ற பல்வேறு செயல்களை இந்த செயலி மூலம் பதிவு செய்து அதனை தங்களின் நண்பர்களுடன் பகிர்ந்தனர்.

ஆனால் இன்று இதன் எல்லை அளவு கடந்துவிட்டது, இன்று பலர் தங்களின் முழுநேரத்தையும் இதிலேயே கழிக்கின்றனர். மேலும் இச்செயலியை பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இதனால் இவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இதில் இப்போது அப்லோட் செய்யப்படும் வீடியோக்கள் பல தவறான செயல்களை கொண்டுள்ளதாகவும், மேலும் இதில் மற்றவர்களை கிண்டல் செய்வது போன்ற வீடியோக்கள் அதிகமாக இடம் பெறுவதால். சட்டம் ஒழுங்கு கெடுவதற்கு வழிவகை செய்யும் வகையில் உள்ளது.

மேலும் இதன் வளர்ச்சியால் இளம்பெண்களும், குடும்பப் பெண்களும் அதிகமாக பயன்படுத்துவதால், பாதுகாப்பு வழிமுறைகள் இல்லாததால் இந்த செயலி மூலம் தவறான முறையில் வீடியோக்களை மார்பிங் செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே, இச்செயலியை தடை செய்ய வேண்டும் என்று தமிழக சட்டபேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன். ப்ளூ வேல் கேமினை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது போல், டிக் டாக் செயலியை தடை செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் எனக் கூறினார். இதனால் விரைவில் டிக் டாக் செயலிக்கு தடை வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்:- டிக்டோக்கிற்கு போட்டியாக களத்தில் இறங்கிய பேஸ்புக் நிறுவனத்தின் லஸ்ஸோ

டிக் டாக் செயலியை தடை செய்யலாமா அல்லது தடை செய்யகூடாத உங்களின் கருத்து என்ன. உங்கள் கருத்துக்களை எங்களுக்கு கமெண்ட்ஸ் மூலம் தெரிவியுங்கள்.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறோம், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்