இண்டர்நெட்டிலிருந்து கிட்டத்தட்ட எதையும் டவுன்லோட் செய்ய நூறு அதிகமான வெவ்வேறு வழிகள் உள்ளன, இருப்பினும், ஒவ்வொரு முறையும் சட்டபூர்வ வழி அல்ல. இலவச MP3 பாடல்களை வழங்குவதற்கு ஆயிரக்கணக்கான தளங்கள் இண்டர்நெட்டில் உள்ளன, ஆனால் அவற்றில் எதுவுமே பாடல்களுக்கான உரிமைகள் அல்லது உரிமங்களைக் கொண்டிருப்பது இல்லை.

அவ்வாறு உள்ள எளிமையான தளங்கள் குறித்து காண்போம்.

முதலில் இருப்பது Isaimini.Co என்ற தளம், இதிலிருந்து உங்களுக்கு விருப்பமான தமிழ் பாடல்களை டவுன்லோட் செய்ய முடியும்.

அடுத்து இருப்பது முறையை SenSongs.La மற்றும் TamilDaDa.Info போன்றவை.

இந்த வழிமுறைகளை பயன்படுத்தி தமிழ் பாடல்கள் டவுன்லோட் செய்ய முடியும் என்பதை தெரிவிப்பதற்கே நாங்கள் இங்கு குறிப்பிட்டுள்ளோம், இதனை பயன்படுத்துவது உங்களின் தனிப்பட்ட விருப்பம். இதற்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

ஒருவேளை நீங்கள் விதிமுறைகளை உடைக்க அல்லது சட்டவிரோதமாக பாடல்களைப் பதிவிறக்க விரும்பாத நபராக இருந்தால், நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை, உங்களுக்கும் ஒரு வழி உள்ளது. நீங்கள் விரும்பிய பாடல்களை சட்டபூர்வ தளங்கள் வழியாகவே இலவசமாக பெற முடியும். இதில் முக்கிய பங்கு வகிக்கிறது SoundCloud என்ற இணையதளம்.

SoundCloud குறித்து மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்:- இசை ரசிகர்களுக்கு என ஒரு சிறப்பு சமூக வலைத்தளம்

சரி, நாம் இக்கட்டுரையில் சவுண்ட் கிளவுடிலிருந்து பாடல்களை எவ்வாறு டவுன்லோட் செய்வது என்பதை காண்போம்.

இதற்காக நாம் Chrome பிரௌசரில் SoundCloud Downloader என்ற எஸ்ட்டென்ஷனை பயன்படுத்த உள்ளோம். இதற்கான வழிமுறைகள் பின்வருமாறு.

STEP 1: முதலில் நீங்கள் SoundCloud Downloader எஸ்ட்டென்ஷனை பெற இங்கே கிளிக் செய்யவும் Chrome web store-SoundCloud Downloader.

STEP 2: இதில் SoundCloud Downloader Free என்ற எஸ்ட்டென்ஷனை தேர்ந்தெடுக்கவும். பின் இதில் உள்ள Add to Chrome என்பதை கிளிக் செய்யவும்.

STEP 3: அடுத்து https://www.soundcloud.com/ க்குச் செல்க. இதில் உங்களின் கூகுள் கணக்கை உள்ளிட்டு லாகின் செய்துக் கொள்ளவும்.

STEP 4: பின் இத்தளத்தின் மேல் பகுதியில் உள்ள search பாக்ஸில் உங்களுக்கு விருப்பமான பாடலை தேடவும்.

STEP 5: பாடலை தேர்வு செய்த பின், நீங்கள் பாடலின் அருகில் Download என்ற பட்டனைக் காண்பீர்கள், இதன் மூலம் பாடலை எளிதாக டவுன்லோட் செய்துக் கொள்ள முடியும்.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், கண்டிப்பாக உங்களில் பெரும்பாலானோருக்கு இந்த வழிமுறைகள் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு, நீங்கள் தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா உங்கள் நண்பர்களும் உங்களின் பெற்றோருக்கும் இதனை தெரியப்படுத்த கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து அவர்களுக்கு இதனை வாட்ஸாப் மூலமாகவோ அல்லது பேஸ்புக் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

குறிப்பு:- மேலும் நாங்கள் மேலே குறிப்பிட்ட தளங்களின் URL கள் அவ்வப்போது மாறலாம், இது குறித்து நீங்கள் மேலும் தெரிந்துக் கொள்ள விரும்பினால் கமெண்டில் உங்களுக்காக கேள்விகளை இடவும். உங்களுக்கு பதில் அளிக்க காத்திருக்கிறோம்.

நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்