இன்று இன்டர்நெட்டை பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு கேள்வி இருக்கும் எவ்வாறு தமிழ் வீடியோ பாடல்கள் டவுன்லோட் செய்வது என்று, இது மிகவும் எளிதான காரியம் இதற்கு நீங்கள் எந்த ஆப்பையும் பயன்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை, தொடர்ந்து இதனைக் குறித்து சற்று சுருக்கமாக காண்போம்.

இன்று நீங்கள் விரும்பும் அனைத்து தமிழ் வீடியோ பாடல்களும் யூடுயூப் ஏராளமாக உள்ளன, எனவே யூடுயூப்பிலிருந்தே தமிழ் வீடியோ பாடல்கள் டவுன்லோட் செய்ய முடியும். இதற்கான வழிமுறைகளை காண்போம்.

STEP 1: உங்கள் மொபைலில் யூடுயூப்பை முதலில் ஓபன் செய்யவும்.

STEP 2: இதில் நீங்கள் விரும்பும் வீடியோ பாடலை தேர்ந்தெடுத்து அதனை பிளே செய்யவும்.

STEP 3: பின் இதில் ஷேர் (share) என்ற ஒரு பகுதி இருக்கும் அதனை கிளிக் செய்யவும்.

STEP 4: நீங்கள் கிளிக் செய்த பின்னர் அடுத்த பக்கத்தில் copy link என்ற ஆப்ஸனை காண்பீர்கள், தற்போது இதனை கிளிக் செய்யவும்.

STEP 5: இப்போது நீங்கள் விரும்பிய வீடியோ பாடலுக்கான லிங்க் காப்பி செய்யப்பட்டது.

STEP 6: அடுத்து உங்கள் மொபைலில் உள்ள Chrome செயலியை ஓபன் செய்யவும்.

STEP 7: இதில் நீங்கள் காப்பி செய்த லிங்கினை பேஸ்ட் செய்யவும். அவ்வளவுதான்.

STEP 8: தற்போது உங்கள் பிரௌசரிலும் இந்த பாடல் பிளே ஆகும், அப்பொழுது மேலே உள்ள URL பகுதியில் https://m.youtube.com/watch?v=Tk… என்று இருக்கும். பின் இதில் உள்ள m என்ற பகுதியை நீக்கி அதற்கு பதிலாக https://www.ssyoutube.com/watch?v=Tk… என்பதனை சேர்க்க வேண்டும்.

STEP 9: சேர்த்த பின் search பட்டனை கிளிக் செய்யவும். இது உங்களை அடுத்தப் பக்கத்திற்கு அழைத்து செல்லும்.

STEP 10: இறுதியாக இதில் டவுன்லோட் என்ற ஆப்ஷன் இருக்கும், அதனை கிளிக் செய்யவும். அவ்வளவுதான் நீங்கள் விரும்பிய தமிழ் வீடியோ பாடல் உங்கள் மொபைலின் கேலரியில் பதிவிறக்கம் செய்யப்பட்டது.

இதே முறையினை நீங்கள் உங்கள் கணினியிலும் பயன்படுத்தலாம்.

யூடுயூப் வீடியோக்களை டவுன்லோட் செய்வது சட்டப்பூர்வமானதா

யூடுயூப்பில் வீடியோக்களை பார்க்கும் நாம் அனைவருக்கும் ஒரு கேள்வி இருக்கும், அது யூடுயூப் வீடியோக்களை டவுன்லோட் செய்வது சட்டப்பூர்வமானதா என்று. ஆம், யூடுயூப் வீடியோக்களை பதிவிறக்க மூன்றாம் தரப்பு பயன்பாடுகளைப் பயன்படுத்துவது யூடுயூப் இன் சேவை விதிமுறைகளுக்கு எதிரானதே.

இந்த வழிமுறைகளை பயன்படுத்தி தமிழ் வீடியோ பாடல்கள் டவுன்லோட் செய்ய முடியும் என்பதை தெரிவிப்பதற்கே நாங்கள் இங்கு குறிப்பிட்டுள்ளோம், இதனை பயன்படுத்துவது உங்களின் தனிப்பட்ட விருப்பம். இதற்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

ஒருவேளை நீங்கள் இச்செயலை விரும்பவில்லை என்றால், இதற்கு மாற்றாக இன்னொரு முறை உள்ளது, இது யூடுயூப் சேவை விதிமுறைகளுக்கு எதிரானது அல்ல. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கு யூடுயூப்பே வழிவகை செய்த்துள்ளது.

STEP 1: இதற்கு நீங்கள் உங்கள் மொபைலில் யூடுயூப்பை முதலில் ஓபன் செய்யவும்.

STEP 2: இதில் நீங்கள் விரும்பும் வீடியோ பாடலை தேர்ந்தெடுத்து அதனை பிளே செய்யவும்.

STEP 3: அப்போது அதன் கீழ் பகுதியில் டவுன்லோட் என்ற ஆப்சன் இருப்பதை காண்பீர்கள்.

STEP 4: இதனை கிளிக் செய்யவும். அவ்வளவுதான் நீங்கள் விரும்பிய பாடல் தற்போது டவுன்லோட் செய்யப்பட்டது.

ஆனால் இதில் சிறிய குறை ஒன்று உள்ளது, என்னவெனில் இந்த பாடல் உங்கள் மொபைலின் கேலரியில் பதிவிறக்கம் செய்யப்பட்டமாட்டாது, அதற்கு பதிலாக இது யூடுயூப்பிலேயே ஆப்லைனில் டவுன்லோட் செய்யப்பட்டிருக்கும். இதனை நீங்கள் Wi-Fi அல்லது மொபைல் டேட்டா இல்லாத நேரத்திலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், கண்டிப்பாக உங்களில் பெரும்பாலானோருக்கு இந்த வழிமுறைகள் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு, நீங்கள் தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா உங்கள் நண்பர்களும் உங்களின் பெற்றோருக்கும் இதனை தெரியப்படுத்த கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து அவர்களுக்கு இதனை வாட்ஸாப் மூலமாகவோ அல்லது பேஸ்புக் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்