நீங்கள் புதிய பான் கார்டுக்கு விண்ணப்பித்து இருந்தால் அல்லது உங்களின் பான் கார்டின் மறுபதிப்புக்கு நீங்கள் கேட்டிருந்தால், இதன் ஸ்டேட்டஸ் குறித்து தெரிந்து கொள்ள ஆன்லைனில் வாய்ப்புகள் உள்ளது. அதிர்ஷ்டவசமாக NSDL மற்றும் UTITSL இவை இரண்டும் நமக்கு உதவுகின்றன. ஏனென்றால் NSDL மற்றும் UTITSL-க்கு பான் கார்டுகளை வழங்குவதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆன்லைனில் நமது பான் கார்டு அட்டையின் நிலையை கண்காணிக்கலாம்.

இந்த செயல்முறை மிகவும் எளிதானது, இதற்கு நீங்கள் பான் கார்டு விண்ணப்பித்த போது, உங்களுக்கு ஒரு அப்ளிகேஷன் எண் கொடுக்கப்பட்டிருக்கும், அதனை கொண்டு எளிதாக நீங்கள் ஆன்லைனில் அதன் ஸ்டேட்டஸ் குறித்து தெரிந்து கொள்ள முடியும். மேலும் இது குறித்து தெரிந்துக் கொள்ள பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

எப்படி பான் கார்டு ஸ்டேட்டஸ் குறித்து ஆன்லைனில் தெரிந்து கொள்ள (NSDL)

முதலில் NSDL இன் பான் கார்டு நிலையை கண்காணிக்கும் பக்கத்திற்கு செல்க. இதற்கான லிங்க் கீழே உள்ளது பயன்படுத்திக் கொள்ளவும்.

NSDL PAN application status tracking page

இதில் PAN – New / Change Request என்பதை தேர்வு செய்யவும்.

அடுத்து உங்களின் Acknowledgement number-ஐ உள்ளிடவும், இந்த எண் உங்களுக்கு நீங்கள் பான் கார்டு விண்ணப்பித்த போது என்எஸ்டிஎல் (NSDL) லிருந்து ஈமெயிலாக தரப்பட்டிருக்கும்.

இதன் பின் படத்தில் உள்ள கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.

இறுதியாக Submit என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது நீங்கள் உங்களின் பான் அட்டை விண்ணப்பத்தின் நிலையை காண்பீர்கள்.

இதனை தாண்டி இன்னொரு முறையும் உள்ளது. அதுதான் UTITSL முறை.

எப்படி பான் கார்டு ஸ்டேட்டஸ் குறித்து ஆன்லைனில் தெரிந்து கொள்ள (UTITSL) முறையை பயன்படுத்தி

முதலில் UTITSL இன் பான் கார்டு நிலையை கண்காணிக்கும் பக்கத்திற்கு செல்க. இதற்கான லிங்க் கீழே உள்ளது பயன்படுத்திக் கொள்ளவும்.

UTITSL PAN card application status page

மேல் குறிப்பிட்ட முறையினை போன்று, அடுத்து உங்களின் Application coupon number-ஐ உள்ளிடவும், இந்த எண் உங்களுக்கு நீங்கள் பான் கார்டு விண்ணப்பித்த போது UTITSL லிருந்து ஈமெயிலாக தரப்பட்டிருக்கும்.

இதன் பின் படத்தில் உள்ள கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.

இறுதியாக Submit என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது நீங்கள் உங்களின் பான் அட்டை விண்ணப்பத்தின் நிலையை காண்பீர்கள். அவ்வளவுதான்.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்