இன்று நாம் ஒரு வலைத்தளத்தினை பயன்படுத்துகிறோம் அல்லது ஆப்பினை மொபைலில் இன்ஸ்டால் செய்கிறோம் என்றால் அதில் புதிய கணக்கினை துவங்க வேண்டியுள்ளது, இதில் நம்முடைய ஈமெயில் முகவரி, யுசர்நேம் மற்றும் பாஸ்வோர்ட் போன்ற தகவல்களை கொடுக்கிறோம். இவ்வாறு கொடுக்கப்படும் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதா என்று நாம் எப்படி நம்புவது.

இதற்காக Password Checkup எனும் இணையப் பாதுகாப்புக்கான புதிய செக்-அப் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதனை நாம் பயன்படுத்தும் கிரோம் பிரௌசரில் extension னாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன்மூலம், நாம் நம்முடைய ஆன்லைன் கணக்குகளை முடிந்தவரை பாதுகாப்பாக வைத்திருக்கமுடியும்.

பாஸ்வோர்ட் செக்-அப்பில் உள்ள சிறப்பு அம்சங்கள்

இதன் மூலம் நாம் டைப் செய்யும் பாஸ்வேர்டு பாதுகாப்பானதா என்பதை எளிதாக கண்டறிந்து கொள்ள முடியும்.

மேலும் நம்முடைய பாஸ்வேர்டு ஏற்கெனவே ஏதேனும் டேட்டா லீக்கில் பறிபோகியுள்ளதா போன்ற தகவல்களை கண்காணிக்கவும் வசதியும் இதில் உள்ளது. ஒருவேளை நம்முடைய பாஸ்வேர்டு பறிபோனால் நமக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டு அதனை மாற்றவும் அறிவுறுத்தப்படும்.

அடுத்து ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான கணக்குகளில் உள்ள ஏதேனும் username அல்லது பாஸ்வேர்ட்டினை நீங்கள் டைப் செய்யும் போது அவற்றுடன் இவ்வற்றை ஒப்பிடும். ஒருவேளை அப்படி இருப்பதைக் கண்டறிந்தால் உடனடியாக உங்களின் பாஸ்வேர்டை மாற்றுமாறு உங்களுக்கு எச்சரிக்கையைத் தரும் இந்த புதிய பாஸ்வோர்ட் செக்-அப் extension.

இதில் நீங்கள் பயன்படுத்தும் யுசர்நேம் மற்றும் பாஸ்வோர்ட்கள் முழுமையாக encryption செய்யப்படுகின்றன. இதனால் இதனை யாராலும் பார்க்க முடியாது, குறிப்பாக கூகுள் நினைத்தால் கூட பார்க்க முடியாது. அந்த அளவிற்கு பாதுகாப்பானது.

பாஸ்வோர்ட் செக்-அப்பினை எவ்வாறு பயன்படுத்துவது

இதனை Chrome பிரவுசரில் மட்டும் தான் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.

முதலில் Chrome பிரவுசரின் வலது மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து, அதில் உள்ள More tools என்பதனை தேர்ந்தேடுக்கவும்.

பின் இதில் Extensions என்பதனை கிளிக் செய்யவும்.

அடுத்து, அடுத்தப் பக்கத்தில் Password Checkup என்று தேடவும். கண்டுப்பிடித்த பின் இதில் உள்ள Add to Chrome என்பதனை கிளிக் செய்யவும். அவ்வளவுதான்.

இதனை நேரடியாக பெற இங்கே கிளிக் செய்யவும் Password checkup chrome extension

இனிமேல் நீங்கள் லாகின் செய்யும் போதெல்லாம் உங்கள் பாஸ்வேர்டு பாதுகாப்பானதாக இருக்கிறதா என்பதனை செக் செய்து உங்களுக்கு சொல்லும் இந்த extension.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்