புகைபிடிப்பது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பழக்கங்களில் ஒன்றாகும். உதாரணமாக சராசரியான நபரைக் கவனியுங்கள், யார் கடுமையாக புகைபிடிக்கிறார் மற்றும் நிகோடினுக்கு அடிமையாகியுள்ளார் என்று. எனினும் அவர்கள் புகைபிடித்தல் தங்கள் உயிருக்கு ஆபத்தான விளைவுகளை என்று நன்கு அறிந்திருக்கிறார்கள், எனவே அந்த நச்சு வாயுக்களை உறிஞ்சும் பழக்கத்தை விட்டு விலக விரும்புகிறார்கள். அவர்கள் வேண்டாம் என நினைத்தாலும் அடுத்த நாள் இந்த வாயு குழாய்கள் இல்லாமல் அவர்களால் இருக்க முடியவில்லை.

எனவே நாங்கள், ஒரு சராசரி நபரின் நிகோடின் இல்லாத வாழ்க்கைக்கு எப்படி உதவுவது என்று பார்த்தோம், அப்பொழுதுதான் கூகுளின் ப்ளே ஸ்டோரை பயன்படுத்தும் போது புகைபிடிப்பதை நிறுத்த உதவக்கூடிய சிறந்த பயன்பாடுகளைக் கண்டோம். இதற்காக ப்ளே ஸ்டோரில் ஏராளமான ஆப்கள் உள்ளன அவற்றில் சிறந்த 3 செயலிகளை குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

1. Drop It! Quit Smoking

இதன் எளிமையான அமைப்பு உங்களுக்கு முக்கியமான தகவல்களை சுட்டிக் காட்டுகிறது, குறிப்பாக நீங்கள் எவ்வளவு நேரம் புகைப்பிடிக்காமல் இருந்துள்ளீர்கள், இதனால் எத்தனை சிகரெட்களைத் தவிர்த்துள்ளீர்கள், மேலும் இதன் மூலம் நீங்கள் சேமித்த பணத்தின் மதிப்பு மற்றும் இதுப் போன்ற உங்களுக்கு உதவிகரமான இன்னும் பல தகவல்கள் உள்ளன.

எளிய ஒன்றை நீங்கள் விரும்பினால் மட்டுமே இதைப் பயன்படுத்தவும், மேலும் இதில் உங்களின் ஹெல்த் குறித்த தகவல்கள் அழகாக Stacked Bar Chart முறையில் கொடுக்கப்பட்டிருப்பது கண்டிப்பாக உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

Download – Drop It! Quit Smoking

2. Quit Now

நீங்கள் பயன்படுத்த ஒரு எளிய பயன்பாட்டை விரும்பினால், கண்டிப்பாக இது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். இது உங்களைக் குறித்த தகவலை நன்கு வடிவமைத்த முறையில் அளிக்கிறது. இதன் முக்கிய அம்சம் இதில் உங்களைப் போன்று புகைப்பிடிப்பதை தவிர்க்க விரும்பும் மற்ற பயனாளர்களுக்கும் இணைந்திருப்பர் அவர்களுடன் நீங்கள் சாட்டிங் செய்ய முடியும், நிச்சயமாக உங்கள் உணர்வுகளையும், சவால்களையும் பற்றி பேசுவதற்கு இது உதவி புரியும்.

Download – Quit Now

3. Smoke Free

Smoke Free ஆப் ஆயிரக்கணக்கானவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது, இது புகைபிடிப்பதைத் தடுக்க உதவும் ஒரு மிகவும் பயனுள்ள பயன்பாடாகும். இந்த நன்கு வடிவமைக்கப்பட்ட பயன்பாட்டு ஒரு தெளிவான அமைப்பினைக் கொண்டு உள்ளது, இதில் நாம் அடிக்கடி பார்க்கும் வகையில் நம்மை மோட்டிவேட் (motivate) செய்யும் படங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. மேலும் இதில் நீங்கள் ஒவ்வொரு நாளும் தவிர்க்கும் சிகரெட்டுகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும்.

Download – Smoke Free

அனைவருக்கும் தெரியும், ஒரு நபர் புகைபிடித்தல் போன்ற ஒரு பழக்கத்தை ஒரே இரவில் கைவிட முடியாது என்று, எனினும் உயிருக்கு அச்சுறுத்தும் பழக்கத்தை அவர்கள் கைவிட உதவுவது அவர்களின் உறுதியும் அர்ப்பணிப்புமே. எனவே, இந்த புகைப்பிடித்தல் பழக்கத்தில் இருந்து வெளியேற விரும்பும் உங்கள் நண்பர்களும் இந்த ஆப்புகள் குறித்த தகவலை ஷேர் செய்யவும்.

மேலும் இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்