உங்களுக்கு நெருங்கியவர் உங்களை வாட்சப்பில் புறக்கணித்துவிட்டாரா, மேலும் வாட்சப்பில் புறக்கணிக்கப்படுதல் (Ignored) மற்றும் தடுக்கப்படுதல் (Blocked) ஆகியவற்றிற்கு இடையில் உள்ள வித்தியாசத்தை சொல்வது மிகவும் கடினம். ஏனென்றால் இது மறுமுனையில் உள்ளவரின் தனிப்பட்ட விருப்பம். அது அவருடைய மன நிலையை சார்ந்தது.

எடுத்துக்காட்டுக்கு, ஒருவர் என்னை வாட்ஸாப்பில் பிளாக் செய்து விட்டால், அவரிடம் நேரடியாக ஏன் என்னை பிளாக் செய்தீர்கள் என்று கேட்பது நிச்சயமாக சங்கடமான இருக்கும். மேலும் எனக்கு அன்பானவர் என்னை பிளாக் செய்தால், அவர் என்னை பிளாக் செய்துள்ளார் என்பதை நான் எவ்வாறு கண்டறிவது. அதற்கான பதிலை இக்கட்டுரையில் காண்போம்.

இதற்கு உங்களின் வாட்ஸாப்பை திறந்து, கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

Last Seen Status ஐ பயன்படுத்தி

முதலில் நீங்கள் கண்டறிய விரும்பும் நபரின் சேட் பகுதிக்கு சென்று அவரின் Last Seen நேரத்தை சரிபார்க்கவும், இதனை உங்களால் பார்க்க முடியவில்லை என்றால், நீங்கள் ஒருவேளை பிளாக் செய்யப்பட்டிருக்கலாம்.

இப்பொழுது நீங்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும், அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது. ஏனெனில் வாட்ஸாப்ப் வேண்டுமென்றே “கடைசியாக பார்த்த” நேரத்தை பிளாக் செய்ய ஒரு ஆப்ஷைனை அமைத்துள்ளது. இந்த Last Seen அமைப்பு உங்களுக்கு கைக்கொடுக்கவில்லை என்றால், இது தவிர இன்னும் பல வழிமுறைகள் உள்ளன, அவ்வற்றையும் காண்போம்.

வாட்ஸாப்பின் டிக்குகள் பயன்படுத்தி

வாட்ஸாப்பின் ப்ளூ டிக் மூலம் கண்டறிவது, முதலில் ஒவ்வொரு டிக்கிற்கான காரணத்தை அறிவோம்.

  1. ஒரு டிக் என்றால் செய்தி அனுப்பப்பட்டுள்ளது என்று பொருள்.
  2. இரண்டு டிக் என்றால் அனுப்பிய செய்தி மறுமுனையில் உள்ளவர் பெற்று கொண்டார் என்று பொருள்.
  3. இரண்டு ப்ளூ டிக் என்றால் நாம் அனுப்பிய செய்தி மறுமுனையில் உள்ளவரால் வாசிக்கப்பட்டது என்று பொருள்.

இது எல்லாம் சரி, ஒருவேளை நீங்கள் பிளாக் செய்யப்பட்டிருந்தால். உங்களால் ஒரு டிக்கை மட்டுமே பார்க்க முடியும். ஏனென்றால் செய்தி அனுப்பப்பட்டுள்ளது மறுமுனையில் உள்ளவர் செய்தியினை பெறவில்லை.

இதிலும் நீங்கள் அவசரம் காட்டக்கூடாது, ஏனெனில் ஒருவேளை பயனர் தன் தொலைபேசியை இழந்து இருக்கலாம் அல்லது இன்டர்நெட்டை பயன்படுத்தாமல் இருந்து இருக்கலாம். எனவே அடுத்த வழிமுறையினை பார்ப்போம்.

வாட்ஸாப் குரூப் பயன்படுத்தி

கடைசி வழி இது தான், வாட்ஸாப்பில் புதிதாக ஒரு குரூப் கிரியேட் பண்ணுங்கள் அதில் நீங்கள் சந்தேகிக்கும் நபரின் எண்ணையும் மற்றும் தேவைப்பட்டால் ஒரு சில உங்களின் நண்பர்களின் எண்ணையும் இணையுங்கள்.

இப்படி நீங்கள் இணைக்கும் போது, குறிப்பாக நீங்கள் சந்தேகிக்கும் நபரின் எண்ணை சேர்க்கும் போது உங்களுக்கு ஒரு அலெர்ட் மெசேஜ் வரும் அதாவது You don’t have the authorization to add them என்பது போன்று. இதன் மூலம் நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம், நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்று.

அன்பிளாக் செய்வதற்கான வழி உள்ளதா

எதிர்பாராதவிதமாக, நீங்கள் வாட்ஸாப்ப் பயன்பாட்டின் மூலம் எதையும் செய்ய முடியாது. குறிப்பாக உங்களை அன்பிளாக் செய்ய முடியாது. அதற்கான வழிமுறைகள் வாட்ஸாப்பில் இல்லை. ஒரே வழி உங்கள் நண்பரை மீண்டும் சந்தித்து பகைமையை மறந்து பழைய படி நட்புறவு கொள்ளவும்.

மேலும் இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்