வாட்ஸாப்ப் கால்களை எப்படி ரெகார்ட் செய்வது என்று தெரிந்துக் கொள்ள விரும்புகிறீர்களா, அப்படி என்றால் கண்டிப்பாக இந்த கட்டுரை உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

தொலைபேசி அழைப்புகளை விட நம்பகமானவை என்பதால் நாம் இன்று வாட்ஸாப்ப் அழைப்புகளை அதிகமாக பயன்படுத்துகிறோம். பொதுவாக, தொலைபேசியில் நேர்காணல் செய்யும் போது, ​​தொலைபேசி அழைப்புகளை பதிவு செய்வது பத்திரிகையாளர்களுக்கு அவசியம். அவ்வாறே வாட்ஸாப்ப் கால்களை எப்படி ரெகார்ட் செய்வது என்பதைக் குறித்து அறிந்துக் கொள்வதும் அவசியம்.

அண்ட்ராய்டு மற்றும் iOS இல் வாட்ஸாப்ப் கால்களை ரெகார்ட் செய்வதற்கு வழிகள் உள்ளன, ஆனால் இதிலும் சில பிரச்சினை உள்ளது. நீங்கள் இதனை செய்ய குறிப்பிட்ட மொபைல் சாதனத்தைக் கொண்டிருக்க வேண்டும். மேலும் நீங்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றுவதற்கு முன், தயவுசெய்து வாட்ஸாப்ப் கால்களை ரெகார்ட் செய்வதற்கு முன்னர் மறு முனையில் உள்ள நபரிடம் அனுமதி பெற்றுக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் பதிவு செய்யும் அழைப்புகள் சட்டப்பூர்வமானவையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

கியூப் கால் ரெக்கார்டரைப் பயன்படுத்தி அண்ட்ராய்டில் வாட்ஸாப்ப் கால்களை எப்படி ரெகார்ட் செய்வது

நாங்கள் ஏற்கெனவே குறிப்பிட்டது போலவே இந்த வழிமுறைகளை குறிப்பிட்ட மொபைல் சாதனங்களில் மட்டுமே செயல்படுத்த முடியும் என்பதை நினைவில் வையுங்கள். காரணம் என்னவென்றால் ஒரு மொபைலின் வன்பொருள் (Hardware) மற்றும் மென்பொருளின் (software) வரம்புகள் வேறுபாடலாம். மேலும் இந்த கியூப் கால் ரெக்கார்டர் VoIP (Voice over Internet Protocol) அம்சத்தை பயன்படுத்தி கால்களை ரெகார்ட் செய்கிறது. இந்த VoIP தொழில் நுட்பம் சில மொபைல் போன்களில் மட்டுமே உள்ளது.

ஆண்ட்ராய்டுக்கான இச்செயலியை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும் Cube Call Recorder.

வாட்ஸாப்ப் கால்களை ரெகார்ட் செய்வதற்கு கியூப் கால் ரெக்கார்டர் அனுமதிக்கும் மொபைல் போன்களின் பட்டியலை இந்த பதிவில் இணைத்துள்ளேன், Google Spreadsheet இதனை கிளிக் செய்து தெரிந்துக் கொள்ளவும்.

மேற்கூறிய பட்டியலில் உள்ள மொபைல் சாதனத்தை நீங்கள் வைத்திருந்தால், நீங்கள் இந்த படிகளை முயற்சிக்கவும்.

  1. முதலில் உங்கள் தொலைபேசியில் கியூப் கால் ரெக்கார்டர் நிறுவவும்.
  2. அடுத்து கியூப் கால் ரெக்கார்டரை திறந்து, உடனே வாட்ஸாப்ப் செயலிக்கு மாறிக் கொள்ளவும்.
  3. நீங்கள் பேச விரும்பும் நபரை அழைக்கவும்.
  4. நீங்கள் பேசும் போது கியூப் கால் ரெக்கார்டரில் லைட் எரிகிறது என்றால், அது வேலை செய்கிறது என்று அர்த்தம்.
  5. ஒருவேளை இதில் எதும் பிழை காண்பிக்கப்பட்டால், செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று Force VoIP call as voice call என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  6. மீண்டும் கால் செய்யவும், அவ்வளவுதான்.
  7. ஒருவேளை மீண்டும் பிழை காண்பிக்கப்பட்டால், துரதிருஷ்டவசமாக உங்கள் மொபைல் போன் இந்த செயலியை ஆதரிக்க வில்லை என்று அர்த்தம்.

முன்னர் சொன்னது போல், வாட்ஸாப்ப் கால்களை ரெகார்ட் செய்வது என்பது மிகவும் சிக்கலானது, ஒருவேளை இந்த முறை உங்களுக்கு வேலை செய்யவில்லை என்றால், மிகவும் சுலபமான நீங்கள் உங்கள் மொபைல் போனில் அழைப்புகளை விடுக்கும் போது ஸ்பீக்கரில் வைத்திருக்கவும் மற்றும் இரண்டாவது தொலைபேசி வழியாக அந்த அழைப்பினை பதிவு செய்யலாம்.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்