இந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தும் பிரபலமான தகவல்தொடர்பு தளமான வாட்ஸாப்பில் பரவிக் கொண்டிருக்கும் வதந்திகள் நாட்டின் பல சம்பவங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன, இது அரசாங்கத்திற்கு ஒரு கடுமையான தலை வலியை உண்டாக்குகிறது, இதனை கட்டுப்படுத்த இந்தியா மட்டுமில்லாமல் உலகின் அனைத்து நாடுகளும் வாட்ஸாப்பிடம் பல முறை முறையிடுள்ளன.

இதற்காக வாட்சப் நிறுவனம் தவறான தகவல்கள் மற்றும் ஆபத்தான வதந்திகள் வாட்ஸாப்பில் பரவுவதை தவிர்க்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது, கடந்த சில மாதங்களில் மட்டும், வாட்ஸாப்பில் செய்திகளை ஷேர் செய்வதில் பல மாற்றங்களை கொண்டுவரப்பட்டுள்ளன. அவை ஒருவேளை உங்கள் நண்பர் உங்களுக்கு ஏதேனும் பார்வேர்டெட் மெசேஜ் அனுப்பி இருந்தால், சாட்டின் தொடக்கத்தில் இந்த மெசேஜ் Forwarded மெசேஜ் என்று உங்களுக்கு அடையாளப்படுத்தப்படும். இதன் மூலம் ஓரளவிற்கு போலிகளை தவிர்க்கலாம்.

மேலும் வாட்ஸாப்பில் தகவல்கள் அதிகளவு ஷேர் செய்யப்படுகின்றன, இதனை கட்டுப்படுத்துவதற்க்கு ஒரு நபர் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் ஒரு மெசேஜை பார்வேர்டு செய்ய முடியாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் முதன் முதலில் இந்தியாவில் கொண்டு வரப்பட்டன, ஆனால் தற்போது இந்த கட்டுப்பாடு உலகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் ஆபத்தான வதந்திகள் வாட்ஸாப்பில் பரவுவதை தவிர்க்க மாதம் சுமார் 20 லட்சம் கணக்குகளை டெலீட் செய்துள்ளது வாட்ஸ்அப். தேர்தல் நெருங்குவதால் இந்த விஷயத்தில் இந்திய அரசும் கூடுதலாக அழுத்தம் தந்து கொண்டிருக்கிறது. இதன் அடுத்தக்கட்டமாக சந்தேகத்திற்குரிய கணக்குகளை பயனாளிகளே ரிப்போர்ட் செய்வதன் மூலம் பல மோசடி கணக்குகளை நீக்கமுடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது வாட்ஸ்அப். இதற்காக பயனாளிகளின் உதவியை நாடியுள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.

இனிமேல் பல்க் மெசேஜிங்கிற்கும் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது, இதனால் “குட் மார்னிங்’ மெசேஜ் அனுப்பினால் கூட உங்கள் கணக்கு நீக்கப்பட அதிகம் வாய்ப்புகள் உள்ளது. எனினும் இதுக் குறித்து தெளிவான விளக்கம் வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் போலிச் செய்திகள் மற்றும் வதந்திகள் குறித்த விழிப்புணர்வை பயனர்களிடையே உருவாக்குவதற்க்காக, சிறப்பாக வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் இந்தியர்களுக்காக முதன் முதலாக தொலைக்காட்சி விளம்பரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வாட்ஸாப்பை எவ்வாறு பயன்படுத்துவது ஆபத்தான வதந்திகளை எவ்வாறு தெரிந்து கொள்வது போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இதனை ஆங்கிலத்திலும், ஹிந்தி மொழியிலும் நீங்கள் பார்க்கலாம்.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்