வாட்ஸ்அப் இன்று அனைவருக்கும் முக்கியமான செயலிகளில் ஒன்றாக மாறிவிட்டது. புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் அனைவரும் முதலில் இன்ஸ்டால் செய்யும் செயலியாகவும் வாட்ஸ்அப் உள்ளது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இச்செயலி மூலம் நாம் நம்முடைய தகவல்களை எளிதாகப் பகிர்ந்துகொள்ள முடியும்.

குறிப்பாக வாட்ஸ்அப்பில் நாம் பயன்படுத்தும் குரூப்க்கள் மூலமாக ஒரே நேரத்தில் பலருடன் நம்மால் கலந்துரையாட முடியும். நம்மில் பலர் நம்முடைய காலேஜ் குரூப்களிலும், நண்பர்களின் குரூப்களிலும் இணைக்கப்பட்டிருப்போம். இந்த குரூப்களிலின் மூலம் நாம் நம்முடைய மெசேஜ்களையும், வீடியோ, புகைப்படங்கள் போன்ற தகவல்களையும் எளிதாக ஷேர் செய்கிறோம்.

இவ்வளவு பயனளிக்கும் இந்த வாட்ஸ்அப் குரூப்க்களில் ஒரு சிறிய பிரச்சனை உள்ளது சிலர் நம்முடைய நம்பரை நமக்கே தெரியாத குரூப்களில் இணைத்து விடுகின்றனர். இது சில சமயங்களில் நமக்கு தொந்தரவாகவும் அமைந்து விடுவதுண்டு. இதற்குக் காரணம் வாட்ஸ்அப்பில் இப்போது யார் வேண்டுமானாலும் எந்த குரூப்பில் வேண்டுமானாலும் ஒருவரை அவருடைய விருப்பமில்லாமல் சேர்த்து விட முடியும்.

தற்போது இதனை சரி செய்ய வாட்ஸ்அப் ஒரு முடிவு எடுத்துள்ளது. அதன்படி இனிமேல் ஒருவரின் விருப்பமில்லாமல் அவரை குரூப்பில் அவரைச் சேர்க்க முடியாது.

இதன் படி wabetainfo வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்த வசதி வாட்ஸ்அப்பின் Settings > Account > Privacy > Groups என்ற பகுதியில் சேர்க்கப்பட உள்ளது. இதில் Everyone, My Contacts, Nobody என்ற மூன்று விருப்பங்கள் கொடுக்கப்பட உள்ளன. இதன் மூலமாக ஒரு குரூப்பில் நம்மை இணைப்பதற்கு யாரெல்லாம் நமக்கு அழைப்பு விடுக்க முடியும் என்பதை நாமே தேர்வு செய்து கொள்ள முடியும்.

ஒருவேளை அவர் நம் காண்டாக்டில் உள்ள நம் நண்பராக இருக்கலாம், இதில் My Contacts என்பதை தேர்வு செய்தால் நம் நண்பர் மட்டுமே நம்மை வாட்ஸ்அப் குரூப்களில் இணைக்கும் தகுதியை பெறுவார். அல்லது நாம் Everyone என்பதனை தேர்வு செய்தால் யார் வேண்டுமென்றாலும் நம்மை குரூப்பில் சேர்த்துக் கொள்ள முடியும். ஒருவேளை நாம் இதனை விருப்பவில்லை என்றால் Nobody என்பதை தேர்வு செய்யலாம். இதனை தேர்வு செய்தால் ஒருவராலும் நம்மை எந்த வித குரூப்பிலும் சேர்த்துக் கொள்ள முடியாது.

மேலும் நாம் இந்த அழைப்பை ஏற்காவிட்டால் 72 மணி நேரங்களில் அழைப்பானது தானாகவே காலாவதியாகிவிடும் போன்ற வசதி உள்ளது. தற்பொழுது இந்த வசதி ஐஓஎஸ் இயங்குதளத்துக்கான வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாரெல்லாம் வாட்ஸ்அப்பின் இந்த புதிய வசதியை வரவேற்கிறீர்கள், இதுக் குறித்த உங்கள் கமெண்ட்ஸ்களை எங்களுக்கு தெரிவிக்கவும்.

மேலும் இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்