தற்போது யூடியூபில் நீங்கள் விமர்சனத்திற்கு என்று பல வீடியோக்களைப் பார்க்கலாம். குறிப்பாக செல்போன்கள் மற்றும் கார்களின் விமர்சனங்கள் தொடங்கி புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களுக்கும் கூட விமர்சனங்கள் அளிக்கப்படுகிறது, ஒவ்வொரு யூடியூப்பருக்கான இலக்கு அவர்களது வீடியோக்கள் அதிகபட்ச பார்வையாளர்களைப் பெற வேண்டும் என்பதே.

சிலர் தங்கள் வீடியோக்களை வேடிக்கைக்காக பதிவேற்றுகின்றனர், சிலர் இந்த அரங்கத்தை ஒரு தொழிலாக மாற்றியவர்களும் உள்ளனர். அவர்கள் தங்கள் திறமையைக் காண்பிப்பதில் மற்றும் பார்வையாளர்களை ஈர்ப்பதில் நிறைய முயற்சி செய்கிறார்கள்.

தற்போது போர்ப்ஸ் (Forbes) பத்திரிக்கை 2018 ஆம் ஆண்டில் யூடியூபிலிருந்து அதிகம் சம்பாதிக்கும் யூடியூப் நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மிகவும் நம்பமுடியாததாக, ஏழு வயது குழந்தையின் யூடியூப் சேனல் பட்டியலின் மிக உயர்மட்டத்தில் உள்ளது.

இந்த 7 வயது குழந்தை, விளையாட்டு பொம்மைகளை விமர்சனம் செய்து யூடியூபிலிருந்து 155 கோடி (22 மில்லியன் டாலர்) சம்பாதித்துள்ளது. இந்த குழந்தையின் பெயர் ரியான், இவர் யூடியூபில் Ryan ToysReview என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்திவருகிறார். இவரை யூடியூப் சேனலை 17 மில்லியன் பார்வையாளர்கள் பின்தொடர்கின்றனர்.

அடுத்து இக்குழந்தையை தொடர்ந்து,

Jake Paul

வைன் (Vine app) பயன்பாடு குறித்த இவரது வீடியோக்கள் யூடியூபில் மிகவும் பிரபலம், இவர் யூடியூபிலிருந்து 21.5 மில்லியன் டாலர் சம்பாதித்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Dude Perfect

இது ஐந்து நபர்களை கொண்ட குழு, இவர்களின் படப்பிடிப்பு குறித்த விளக்கங்கள் (Shooting trick shots) யூடியூபில் மிகவும் பிரபலமானவை. இவர்கள் 20 மில்லியன் டாலர் சம்பாதித்து மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

Dan TDM

கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த இவர் இந்த ஆண்டு 18.5 மில்லியன் டாலர் சம்பாதித்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இவருடைய பெயர் டேனியல் மிடில்டன் (Daniel Middleton) பிரிட்டிஷ் கேமெர் (British gamer). Minecraft கேமில் வல்லுநர்.

Jeffree Star

இவர் மைஸ்பேஸ் (Myspace) காலத்தில் இருந்தே பிரபலமான ஒப்பனை கலைஞர் (Makeup artist), இந்த ஆண்டு யூடியூபிலிருந்து 18 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார் இவர். மேலும் Jeffree Star Cosmetics என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் ஆண்டுதோறும் 100 மில்லியன் டாலர் பிளஸ் கண் நிழல்கள் (Eye shadow) மற்றும் உதட்டுச்சாயங்கள் (lipstick) விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் இவர்களை தொடர்ந்து முறையை Markiplier, Vanoss Gaming, Jacksepticeye, PewDiePie மற்றும் Logan Paul போன்ற யூடியூப்பர்கள் தங்களுக்காக இடத்தைப் பெற்றுள்ளனர். இது இந்த ஆண்டிற்கான பட்டியல், அடுத்த ஆண்டு யார் யார் எந்த இடத்தை பிடிக்கிறார்கள் என்று பார்ப்போம்.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்