நம்ம எல்லாருக்குமே நம்முடைய பெயரை ஸ்டைலா எழுதுனும் அப்படினு ஆசை இருக்கும், இப்போ தொழில் நுட்பத்தின் முன்னேற்றத்தின் காரணமாக எல்லாமே எளிதாகிவிட்டது. முன்பெல்லாம் போட்டோஷாப் தெரிந்திருந்தால் தான் டிசைன் பண்ண முடியும் என்ற நிலைமை இருந்தது. ஆனால் இன்று யார் வேண்டுமென்றாலும் மிகவும் அழகாக டிசைன் பண்ண முடியும்.

ஸ்மார்ட் போன்களில் உள்ள ஆப்கள் அவ்வற்றை எளிதாகி விட்டன. மேலும் கூடுதலாக மூவி போஸ்டர்களில் பயன்படுத்தப்படும் ஸ்டைல் போன்று நம்மால் எளிதாக ஆப்பினை பயன்படுத்தி நம்முடைய பெயரினை டிசைன் செய்துக் கொள்ள முடியும். இதற்கு Movie Fonts Linksind என்ற ஆப் உதவுகிறது.

இதில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் உள்ள படங்களின் Font ஸ்டைல்கள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக நம்மை மிகவும் கவர்ந்த 96, பேட்ட, காலா, பாகுபலி மற்றும் இது போன்ற பல படங்களின் Font ஸ்டைல்கள் உள்ளன.

Movies Style Name Generator எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்

ஆண்ட்ராய்டுக்கான இச்செயலியை முதலில் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளவும்.

டவுன்லோட் செய்வதற்க்கான லிங்க் இங்கே உள்ளது கிளிக் செய்யவும் Movies Style Name Generator.

இச்செயலியை டவுன்லோட் செய்து உங்களின் மொபைலில் நிறுவிய பிறகு இதனை ஓபன் செய்யவும். இதில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் உள்ள படங்களின் Font ஸ்டைல்கள் வரிசைப்படுத்திக் காண்பிக்கப்பட்டிருக்கும்.

அடுத்து, இதில் உங்களுக்கு விருப்பமான படத்தின் Font ஸ்டைலினை தேர்வுசெய்யவும். இதன் பின், இதில் உங்களின் பெயரை உள்ளிடவும்.

மேலும் நாம் தேர்வு செய்த 96 படத்தில் மூன்று ஸ்டைல்கள் உள்ளன. இதில் உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்தேடுத்துக் கொள்ளலாம்.

இறுதியாக நீங்கள் தேர்வுசெய்த பின்னர், பக்கத்தின் கீழ் உள்ள டவுன்லோட் என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

அவ்வளவுதான் நீங்கள் டிசைன் செய்த உங்களின் பெயர் உங்கள் மொபைலின் கேலரியில் டவுன்லோட் ஆகியிருக்கும். இதனை உங்களின் ப்ரொபைல் போட்டோவாகவே அல்லது புதிய பதிவாகவோ சமூக வலைத்தளங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மொபைல் ஆப்பினை பயன்படுத்த விரும்பாதவர்கள் இதனை உங்களின் பிரௌசரில் கூடப் பயன்படுத்தலாம். இதற்கான அதிகாரப்பூர்வ தளம் LinksInd. இதிலும் நீங்கள் உங்கள் பெயரினை டிசைன் செய்துக் கொள்ளலாம்.

இதனை நாங்கள் பயன்படுத்திய வகையில் இதில் உள்ள சிறிய குறை, இதில் காண்பிக்கப்படும் விளம்பரங்கள் நம்மை எரிச்சலடைய செய்கின்றன. இவை இல்லாமல் இருந்தால் இது இன்னும் கூடுதலாக நமக்கு உதவிகரமாக இருக்கும்.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்