ஆதார் விர்ச்சுவல் ஐடி முறை நடைமுறைக்கு வந்ததாக ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த விர்ச்சுவல் ஐடியின் 16 இலக்க எண்ணை ஆதார் எண்ணுக்கு பதிலாக கொடுக்கலாம். ஒவ்வொரு முறையும் இந்த 16 இலக்க எண் மாறிக் கொண்டே இருக்கும். புதிய ஐடி உருவானதும், பழைய ஐடி தானாகவே ரத்தாகிவிடும்,

இந்த விர்ச்சுவல் ஐடியை ஆதாரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே எடுக்க முடியும். ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் வங்கிகளில் விர்ச்சுவல் ஐடியை ஆதார சான்றாக ஏற்றுக் கொள்ளும் தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

121 கோடி மக்கள் பயன்படுத்தும் ஆதார் எண்ணை, சான்றாக பல நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. ஆகையால் பாதுகாப்பு கருதி இந்த விர்ச்சுவல் ஐடி கொண்டு வரப்பட்டுள்ளது என்கிறது ஆதார் ஆணையம்.

விர்ச்சுவல் ஐடி முறை கொண்டு வரப்பட்டுள்ளதால், இனி ஆதார் எண்ணை நிறுவனங்களிடம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்களின் தகவல்களை பாதுகாக்க இது ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்