ஏர்டெல் நிறுவனம் Airtel Payment Bank பயனர்களுக்கு ATM கார்டு பயன்படுத்தாமல் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்திருக்கிறது.

வாடிக்கையாளர்கள் ஏர்டெலின் இந்த சேவையைப் பயன்படுத்த, IMT (Instant Money Transfer) வசதி கொண்ட ATM மிற்கு சென்று, My Airtel app மூலம் cash withdrawal என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

அடுத்ததாக My Airtel app மூலம், மொபைல் எண்ணை பதிவிட்டு கொள்ளவும். பின் பின்வரும் வழிமுறைகளை தொடரவும்.

Enter the sender code > Enter the OTP > Select 1> ATM self withdrawal > Enter the amount

இதன் மூலம் ATM கார்டு பயன்படுத்தாமல் பணத்தை எடுக்க முடியும்.

ஏர்டெல் நிறுவனம், முதல் இரண்டு பண பரிவர்த்தனைகள் இலவசம் எனவும், அதனைத் தொடர்ந்து ரூபாய் 25 கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. தற்போது 20,000 ATM-களில் இந்த வசதி உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 1,00,000 ATM-களில் இந்த வசதி கொண்டு வரப்படும் என்று ஏர்டெல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்