வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளை வழங்கி வரும் அமேசான் நிறுவனம், தற்போது இந்தியாவில் ப்ரைம் ரீடிங் எனும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இதில் இ-புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன, அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்கள் கிண்டில் இ-புத்தகம் மூலமாக அல்லது கிண்டில் ஆப் மூலமாக இந்த வசதியை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.

அமேசான் ப்ரைம் ரீடிங்கில் பிரபலமான இலக்கியங்கள் மற்றும் காமிக்ஸ் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தி, மராத்தி, தமிழ் ஆகிய இந்திய மொழிகளிலும் மற்றும் ஆங்கில மொழியிலும் பல புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

இச்சேவை கடந்த 2016 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

2 thoughts on “அமேசான் நிறுவனத்தின் புதிய அறிமுகம் ப்ரைம் ரீடிங்”

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்