ஐபோன் பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஒரு வழியாக டூயல் சிம் வசதியை அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்.

தற்போது அறிமுகமான ஐபோன் XS, XS Max மற்றும் ஐபோன் XR களில் டூயல் சிம் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இ-சிம் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.

இந்த ஐபோன்கள் ஒரு சிம் ஸ்லாட்டை கொண்டு இருக்கும், மற்றொன்று இ-சிம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்.

அதென்ன இ-சிம் தொழில்நுட்பம்

eSIM என்பதற்கு embedded SIM என்பது பொருளாகும், நாம் வழக்கமாக பயன்படுத்தும் சிம் கார்டுகளை போல இந்த இ-சிம்களைத் தனியாக எடுத்துப் பயன்படுத்த முடியாது. இவை மொபைலின் மதர்போர்டில் நிரந்தரமாகப் பொருத்தப்பட்டு விடும்.

இதில் நெட்வொர்க் மற்றும் சிம் உரிமையார் குறித்த தகவல்களை பதிவு செய்து கொள்ள முடியும்.

நாம் ஒருவேளை நமது நம்பரை, மொபைல் நம்பர் போர்டபிலிட்டி மூலமாக வேறொரு நெட்வொர்க்குக்கு மாற்ற விரும்பினால், பழைய தகவல்களை அழித்துவிட்டு புதிய தகவல்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்பது இதன் சிறப்பு அம்சம்.

பிற ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் தற்போது இந்த தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன, வரும் ஆண்டுகளில் மற்ற ஸ்மார்ட்போன்களிலும் இத்தொழில்நுட்பத்தை எதிர்பார்க்கலாம்.

சீனா, ஹாங்காங் போன்ற நாடுகளில் விற்பனையாகும் ஐபோன்களில் டூயல் சிம் ஸ்லாட்டுகளே கொடுக்கப்பட்டுள்ளன, இவற்றில் இ-சிம் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை.

குறிப்பு:- இந்தியாவில் ஏர்டெலும், ஜியோவும் இ-சிம் தொழில்நுட் வசதியை வழங்குகின்றன.

2 thoughts on “தனது சபதத்தை கலைத்தது ஆப்பிள் நிறுவனம்”

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்