உலகளவில் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களான புதிய ஐபோன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்கள் நேற்று அறிமுகம் செய்யப்பட்டன.

இவற்றில் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச்க்கள் குறித்து காண்போம்.

புதிய அம்சங்களுடன், சிறந்த வடிவமைப்பு கொண்ட புதிய வாட்ச் சீரிஸ் 4 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மற்ற ஸ்மார்ட் வாட்ச்களுடன் ஒப்பிடுகையில் இதனுடைய செயல்பாடு அதிகம் என ஆப்பிள் நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது, இது ஆப்பிளின் புதிய S4 சிப்செட், ECG பரிசோதனை செய்யும் வசதி மற்றும் வாக்கி-டாக்கீ போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

பயனாளிகள் பங்குகள், இதய துடிப்பு, விளையாட்டு, போர்டிங் தகவல்கள் மற்றும் பலவற்றை இதன் மூலம் கண்காணிக்க முடியும்.

தியானத்திற்காக அல்லது தங்களது இதய துடிப்பு குறைக்க பயன்படும் ப்ரீத் பயன்பாடு (Breathe app) தற்போது ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 இல் இடம் பெற்றுள்ளது.

இதன் முந்தைய மாடலை விட இது 30 சதவீதம் பெரிய திரை வசதியினை கொண்டுள்ளது.

ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 இன் விலை ரூபாய் 28,686 எனவும் Cellular model வேரியன்ட் இன் விலை ரூபாய் 35,875 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் விற்பனை செப்டம்பர் மாதம் 21-இல் தொடங்குகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்