கட்டளை வரியில் (Command Prompt) உள்ள சில கட்டளைகளையும், தந்திரங்களையும் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

1. IPCONFIG

Ipconfig என்ற இந்த கட்டளையின் மூலம் நீங்கள் உங்கள் கணினி தற்போது பயன்படுத்தும் IP முகவரியை குறித்து அறிந்து கொள்ளலாம்.

2. PING

Ping இந்த கட்டளையை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் நெட்வொர்க் எவ்வித தடங்கலும் இன்றி வேலை செய்கிறதா என்பதை அறிய முடியும்.

3. IPCONFIG /?

உங்களுக்குத் தேவைப்படும் கட்டளையின் முடிவில் “/?” என்று டைப் செய்யுங்கள், உதாரணமாக, நீங்கள் “ipconfig /?” என்று டைப் செய்தால், அக்கட்டளை சார்ந்த அனைத்து தகவல்களையும் உங்களால் பெற முடியும்.

4. NSLOOKUP

வலைத்தளத்தின் பெயருடன் nslookup என்ற கட்டளையை உள்ளிடுவதன் மூலம் எந்த வலைத்தளத்தின் IP முகவரியையும் நீங்கள் பார்க்கலாம், எடுத்துக்காட்டாக, nslookup techyhunter.com

5. SHUTDOWN

Shutdown என்ற கட்டளையானது பணிநிறுத்தம் செய்ய Windows ஐ அனுமதிக்கிறது.

எடுத்துக்காட்டாக

“shutdown /s” to Shutdown your computer

“shutdown /r “to Restart your windows PC

“shutdown /l” to Log off your computer

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்