உங்கள் Windows PC இல் அண்ட்ராய்டை இயக்க விரும்பினால், இன்று கிடைக்கக்கூடிய emulators களுக்கு பற்றாக்குறையே இல்லை என்று தான் கூற வேண்டும் அந்த அளவிற்கு ஏராளமான emulators கள் இன்று இணையதளத்தில் உள்ளன.

Android emulator களை பயன்படுத்துவதற்கான காரணம் என்ன

  • இதன் மூலம் ஆண்ட்ராய்ட் டெவலப்பர்கள் தங்கள் பயன்பாடுகளை, தங்கள் டெஸ்க்டாப்பிலேயே சரி பார்த்து கொள்ளலாம்.
  • அடுத்து, கேமெர்கள் (Gamers) அண்ட்ராய்டு கேம்களை பெரிய திரையில் தங்களின் கணினிகளில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இவ்வற்றை தவிர மேலும் பலவிதமான பயன்பாடுகள் உள்ளன.

கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் சில ஆண்ட்ராய்டு emulators களில் பிரச்சனைகள் நிறைய இருக்கிறது, அவ்வற்றில் சில சரியாக வேலை செய்வதில்லை மேலும் சில விளம்பரத்திற்காகவே பயன் படுத்தப்படுகின்றன. எனவே, நாங்கள் ஏராளமாக உள்ள Android emulators களில் சிறந்த 3 Android emulators-களை கொண்டு வர முயற்சி செய்துள்ளோம், அவ்வற்றை பற்றி இக்கட்டுரையில் சற்று விரிவாக பார்ப்போம்.

1. MEmu

MEmu அண்ட்ராய்டு லாலிபாப் அடிப்படையிலான Windows க்கான உயர் செயல்திறன் அண்ட்ராய்டு emulator ஆகும். இதில் இயல்பாகவே கூகுள் பிளே ஸ்டாருக்கான வசதி உள்ளது எனவே நாம் இதில் எளிதாக ஆண்ட்ராய்டு செயலிகளையும், கேம்களையும் டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.

MEmu உள்ள சில சிறப்பு அம்சங்கள் Full-screen mode | Screenshot tool | Process kill tool மற்றும் Screen record போன்றவை.

இதனை டவுன்லோட் செய்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் MEmu.

2. Remix OS Player

ரீமிக்ஸ் OS பிளேயர் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷல்லோவை ( Android 6.0 Marshmallow) அடிப்படையாகக் கொண்ட ஒரு இலவச அண்ட்ராய்டு emulator ஆகும். ரீமிக்ஸ் OS பிளேயரை நிறுவுவதற்கு முன் நாம் முதலில் கவனிக்க வேண்டியது Virtualisation Technology நம்முடைய கணினியின் பயாஸில் (BIOS) enable செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும் இது சில AMD சிப்செட்டுகளுக்கு ஆதரவளிக்க வில்லை.

இதுவும் கூகுள் பிளே ஸ்டாருக்கான ஆதரவை அளிக்கிறது, எனவே கூடுதல் பயன்பாடு இல்லாமல் ஆண்ட்ராய்டுக்கான செயலிகளையும், கேம்களையும் எளிதாக பதிவிறக்கம் செய்ய முடியும். இதில் உள்ள சிறப்பு அம்சம் ஒரு திரையில் ஒரே நேரத்தில் பல விளையாட்டுகள் நம்மால் நிர்வகிக்க முடியும்.

மேலும் இது ஆண்ட்ராய்டு டெவலப்பர்களுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது, இதில் டெவலப்பர்கள் தாங்களாகவே, தங்களின் ஆண்ட்ராய்டு செயலிகளை debug செய்வதற்கு signal strength, network type, location, மற்றும் battery போன்றவற்றை மாற்றி அமைத்து கொள்ள முடியும்.

இதனை டவுன்லோட் செய்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் Remix OS Player.

3. Nox Player

நோக்ஸ் பிளேயர் விண்டோஸ் இயங்கு தளத்திற்கான மற்றொரு அண்ட்ராய்டு emulator ஆகும், இது Android 4.4 KitKat அடிப்படையிலானது. இதுவும் கூகுள் பிளே ஸ்டாருக்கான ஆதரவை அளிக்கிறது, மேலும் இதில் நீங்கள் எளிதான முறையில் ஆண்ட்ராய்டுக்கான APK பைல்களை இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும்.

இதில் உள்ள script record என்ற அம்சம், நீங்கள் குறிப்பிட்ட நிகழ்வுகளை திரையில் பதிவு செய்து பின்னர் அவற்றை மறுபயன்படுத்துவதற்கு உதவுகிறது. மேலும் இதில் Multiplayer அம்சமும் உள்ளது, இதனால் ஒரே நேரத்தில் ஆண்ட்ராய்டுக்கான பல நிகழ்வுகளை இதில் இயக்கலாம்.

இதனை டவுன்லோட் செய்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் Nox Player.

இவ்வறை தவிர இன்னும் சில Android emulators கள் உள்ளன, அவ்வற்றை நாங்கள் இந்த பட்டியலில் சேர்க்க வில்லை. அவை BlueStacks, LeapDroid மற்றும் AMIDuOS போன்றவை. நீங்கள் விருப்பப்பட்டால் இதனை டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்