பிளே ஸ்டார் இன்னொரு உலகு போன்றது, இதில் உலகின் மக்கள்தொகையுடன் போட்டி போடும் வகையில் எண்ணற்ற செயலிகள் உள்ளன, குறிப்பாக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பல பயன்பாடுகள் தற்போது இதில் கிடைக்கின்றன, ஒவ்வொன்றும் வித்தியாசமான தோற்றதையும் (Interface) மற்றும் வேறுபட்ட நோக்கத்திற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனின் முதல் பத்து செயலிகளை நாங்கள் உங்களிடம் கொண்டு வருகிறோம், வாருங்கள் பார்ப்போம்.

1. Tiktok

நீங்கள் பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் போது அதில் Tiktok வீடியோக்கள் வரவில்லை என்றால் நீங்கள் ஆச்சரியப்பட வேண்டும், ஏனென்றல் அந்த அளவிற்கு இந்த வருடம் Tiktok க்கின் வளர்ச்சி உள்ளது. எந்த சமூக வலைத்தளங்களை நீங்கள் பயன்படுத்தினாலும் அதில் Tiktok வீடியோக்கள் இடம் பெறுகின்றன.

இந்த பிரபலமான பயன்பாடு சிறிய வீடியோக்களை உருவாக்கி பகிர்வதற்கும், நேரடி வீடியோக்களை (Live videos) ஒளிபரப்புவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இது IOS மற்றும் Android இரண்டிற்கும் கிடைக்கிறது. மேலும் இது பொழுதுபோக்கிற்கு ஒரு பெரிய ஆதாரமாக உள்ளது.

Download TikTok – Apps on Google Play

2. Evernote

தன்னை சுற்றியுள்ள உலகத்தை மறந்து வாழும் அனைவருக்குமான சிறந்த பயன்பாடு இதுவாகும். இந்த பயன்பாடு நீங்கள் குறிப்புகளை எடுக்க உதவுகிறது. மேலும் இதனை உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் எளிதான முறையில் அணுக முடியும். இந்த பயன்பாடு iOS மற்றும் Android இரண்டிலும் கிடைக்கிறது. இது கண்டிப்பாக உங்களுக்கு சரியான உதவியாளராக இருக்கும்.

Download Evernote– Apps on Google Play

3. Whatsapp business

வாட்ஸாப் அதன் வெற்றிக்குப் பிறகு தொடங்கப்பட்டது தான் வாட்ஸாப் பிசினஸ், இந்த Android மற்றும் iOS பயன்பாடானது பிசினஸ்கான தனி பயன்பாடாகும். இது உங்கள் வியாபாரத்தை எளிதாகவும் வசதியாகவும் கையாளும் அம்சங்களை கொண்டுள்ளது. இதில் ஒன்று தான் Quick replies, இது அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு விரைவாக பதிலளிக்க உதவுகிறது.

Download Whatsapp business– Apps on Google Play

4. Pocket

இது முதலில் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப்களுக்கு மட்டுமே வடிமைக்கப்பட்டது, பின்னர் இந்த பயன்பாடு ஸ்மார்ட்போன்கள் பயனாளிகளுக்கும் பிடித்த செயலியானது. முன்னர் இது Read Me என்று அழைக்கப்பட்டது பின்னாளில் Pocket என்று பெயர் மாற்றம் பெற்றது. இது தற்போது iOS மற்றும் Android இல் கிடைக்கிறது, இந்த பயன்பாடானது ஒரு கட்டுரை (article) அல்லது வலைப்பக்கத்தை (webpage) பின்னர் படிக்க ‘read it later’ செய்வதற்கு பயனரை அனுமதிக்கிறது.

Download Pocket– Apps on Google Play

5. Alto’s Odyssey

இது ஒரு பொழுதுபோக்குக்கான சிறந்த விளையாட்டு, கூர்மையான அம்சங்கள் மற்றும் கவர்ச்சிகரமான கிராபிக்ஸ் இதன் தனி சிறப்புகள்.

Download Alto’s Odyssey– Apps on Google Play

6. Scanbot

Scanbot என்பது அண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கான மிகவும் வசதியான ஒரு பயன்பாடாகும். இந்த பயன்பாடு எதையும் ஸ்கேன் செய்ய உதவுகிறது. குறிப்பாக ஆவணங்கள், ரசீதுகள் மற்றும் ஓவியங்கள் போன்றவை.

Download Scanbot– Apps on Google Play

7. Visionist

இந்த பயன்பாடு இன்ஸ்டாகிராமர்களுக்கானது (Instagrammers), இதில் பல அழகான பில்டர்ஸ் மற்றும் எடிட்டிங் ஆப்ஷன்கள் உள்ளன. ஆனால் இது தற்போது iOS பயனாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. விரைவில் ஆண்ட்ராய்டு இயங்குத்தளத்திற்கும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Download Visionist- Apps on App Store

8. LastPass

LastPass என்பது மற்றொரு பயன்பாடாகும், இது உங்கள் போனில் நீங்கள் பயன்படுத்தும் கணக்குகளின் கடவுச்சொற்களை நினைவுபடுத்துகிறது. எடுத்துக்காட்டுக்கு உங்களின் ஈமெயில் பாஸ்வேர்ட், பேஸ்புக் பாஸ்வேர்ட் போன்றவை. மேலும் இவற்றின் அம்சங்கள் ஆன்லைன் ஷாப்பிங், விமான முன்பதிவு, வங்கி மற்றும் பிற போன்ற பணிகளை நமக்கு எளிதாக்குகிறது.

Download LastPass– Apps on Google Play

9. Flipboard

நீங்கள் இந்த உலகில் நடக்கும் செய்திகளை உடனடியாக தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா, அதற்காகவே உள்ளது Flipboard. இது நீங்கள் படிக்க விரும்பும் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்திகளை உங்களுக்கு காட்டுகிறது. குறிப்பாக சொல்ல போனால் இது உங்கள் பாக்கெட்டில் இருக்கும் செய்தித்தாள் போன்றது.

Download Flipboard– Apps on Google Play

10. Calm

இது தியானம் செய்வதற்கு அல்லது மனதை அமைதிப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இதில் பல்வேறு மெட்டுகள் (Tunes) மற்றும் இசைத் தடங்கள் (Music tracks) உள்ளன. இது நீங்கள் மனஅழுத்தம் இல்லாமல் நிம்மதியாக தூங்க உதவி செய்யும்.

Download Calm– Apps on Google Play

இவற்றை தவிர நீங்கள் வேறு என்ன பயன்பாடுகளை நினைக்கிறீர்கள், கீழே கருத்து பகுதியில் எங்களுக்கு சொல்லுங்கள்!

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்