ஆண்ட்ராய்ட் “P” என்பது ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தின் ஒன்பதாவது பதிப்பு ஆகும்.

இதனை பற்றிய அறிவிப்பு கூகுள் நிறுவனத்தால் மார்ச் 2018-ல் வெளியிடப்பட்டது, இது இன்னும் சோதனை நிலையில் உள்ளது.

ஆண்ட்ராய்ட் P-ன் சிறப்பு அம்சங்களை பற்றி பார்ப்போம்.

விரைவான மெனு அமைப்புகள் இதில் உள்ளன.
கடிகாரம் இடது புறமாக நகர்த்தப்பட்டுள்ளது.
பேட்டரி சதவீதம் எப்போதும் காட்சி அளிக்கும்படி உள்ளது.
தொலைபேசி முகத்தை கீழே வைப்பது மூலம் அறிவிப்புகளை (notifications) முடக்க முடியும்.
Gesture based system interface ஐபோன் எக்ஸ் சாதனங்களில் காணப்படுவதைப் போன்றுள்ளது.

Android P க்கான பீட்டா முன்னோட்டமானது, பின்வரும் சாதனங்களுக்கான Google வழங்கியுள்ளது

Google Pixel
Nokia 7 Plus
Oppo R15 Pro
OnePlus 6
Sony Xperia XZ2
Vivo X21
Xiaomi Mi MIX 2S

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்