Google Play Store இல் கணக்கில் அடங்காத எண்ணற்ற வீடியோ எடிட்டிங் செயலிகள் உள்ளன,

அவற்றில் சிறந்த சில ஆண்ட்ராய்டு வீடியோ எடிட்டிங் செயலிகளை குறித்து இக்கட்டுரையில் பார்ப்போம்.

இவை நிச்சயமாக Startup-YouTuber களுக்கு உதவியாக இருக்கும்.

1. VideoShow

VideoShow பல விருதுகளை பெற்றுள்ளது, இது இலவசமாக Play Store இல் கிடைக்கும். அண்ட்ராய்டுக்கான சிறந்த வீடியோ எடிட்டிங் செயலிகளில் சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளது.

இதில் 50க்கும் மேற்பட்ட வெவ்வேறு Theme கள் உள்ளன, மேலும் இதனை பயன்படுத்துவது எளிதானது.

2. PowerDirector Video Editor App

இதில் நீங்கள் சில வினாடிக்குள் தொழில்முறை வீடியோ Editor களை போன்று சிறந்த வீடியோக்களை உருவாக்க முடியும்.

மேலும் இதில் நாம் சுலபமாக பயன்படுத்தக்கூடிய Timeline interface வசதி உள்ளது.

3. Quik

Quik சிறந்த வீடியோக்களை உருவாக்க உதவுகிறது, இதில் வீடியோக்களை 1080p or 720p தரத்தில் உருவாக்க முடியும்.

Quik நம்பகமானது மற்றும் எந்த விளம்பரங்களையும் காண்பிக்காது.

4. FilmoraGo

FilmoraGo என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஆண்ட்ராய்டு வீடியோ எடிட்டிங் செயலியாகும், இது பல பயனர்களால் விரும்பப்படுகிறது.

இதில் முதன்மை செயல்பாடுகளான Trimming, Cutting, Adding themes, Music போன்றவை உள்ளன.

5. Adobe Premiere Clip

இதன் சிறப்பு அம்சம், இச்செயலி தானாகவே நீங்கள் விரும்பும் எந்தவொரு புகைப்படத்தையும், வீடியோக்களாக உங்களுக்கு உருவாக்கி கொடுக்கும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்