இன்று நம் வாழ்க்கை ஸ்மார்ட்போன்களுடன் இணைந்து விட்டது, நம் அத்தனை தேவைகளுக்கும் ஸ்மார்ட்போன்களை தான் நம்பி உள்ளோம் குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் மூலம் நாம் எண்ணற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அவ்வறை நம் போன்களில் சேமித்து வைக்கிறோம்,

 

ஒருவேளை இவற்றை யாரும் பார்க்காதவாறு நீங்கள் தனிப்பட்ட முறையில் (Private) சேமித்து வைக்க விரும்பலாம். இதற்காக ஆண்ட்ராய்டில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மறைத்து வைக்க பல செயலிகள் உள்ளன. அவ்வற்றில் சிறந்த 3 செயலிகளை இந்த கட்டுரையில் தொகுத்துள்ளோம், வாருங்கள் பார்க்கலாம்.

1. KeepSafe Photo Vault

மற்றவர்களிடமிருந்து உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பாதுகாக்கும் சிறந்த பயன்பாடுகளில் மிகவும் குறிப்பிட தகுந்தது இது. ஒவ்வொரு வருடமும் இது பயனாளிகளுக்கு பல புது புது அப்டேட்களை வழங்கி வருகிறது. இதன் மூலம் நம்முடைய தகவல்களின் பாதுகாப்பு மேலும் உறுதிச் செய்யப்படுகிறது.

இதில் தகவல்களை பாதுகாக்க PIN, Pattern மற்றும் Fingerprint authentication போன்ற முறைகள் உள்ளன. இதில் உள்ள முக்கிய அம்சம் நாம் நம்முடைய தகவல்களை இதைப் போன்று KeepSafe-வினை பயன்படுத்தும் நம் நண்பர்களுக்குடன் எளிதாக பகிர்ந்து கொள்ள முடியும். கூடுதலாக அனைத்து தகவல்களையும் பேக்அப் (Back up) எடுத்து கிளவுட் ஸ்டோரேஜில் (Cloud space) சேமிக்க முடியும்.

இதில் உள்ளன மேலும் சில முக்கிய அம்சங்கள், பயன்படுத்த எளிதானது, மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் ஏராளமாக உள்ளன மற்றும் ஒருவேளை உங்களுக்கு தெரியாத நபர் இதனை திறக்க முயற்சி செய்தல் உங்களுக்கு உடனே அலெர்ட் (Break-in Alerts) கிடைக்கும்.

ஆண்ட்ராய்டுக்கான இச்செயலியை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும் KeepSafe Photo Vault

2. LockMyPix Photo Vault

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பாதுகாப்பதற்கு மிக சிறந்த செயலிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஏராளமான செக்யூரிட்டி அம்சங்கள் உள்ளன குறிப்பாக இதில் உள்ள AES என்கிரிப்சன் என்ற தொழிற்நுட்பம் உங்கள் தகவல்களுக்கு அதிக பாதுகாப்பினை அளிக்கிறது.

மேலும் இதில் உள்ள கூடுதல் அம்சங்கள் உங்கள் கைரேகையை பயன்படுத்தி பயன்பாட்டை திறக்க அனுமதிக்கிறது மற்றும் ஒருமுறை மொபைலினை ஷேக் செய்தால் (shake the device) போதும் LockMyPix உள்ள தகவல்கள் அனைத்தும் ஹய்ட் (Hide) செய்யப்படும். மேலும் இதில் உள்ள தகவல்களை பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்கிரீன்ஷாட் (screenshot) எடுக்க முடியாது.

ஆண்ட்ராய்டுக்கான இச்செயலியை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும் LockMyPix Photo Vault

3. Private Zone

வெறுமனே உங்கள் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை மறைக்க மட்டும் இல்லாமல் இதில் ஏராளமான சிறப்பு அம்சங்கள் உள்ளன. அவை,

  • RAM Manager
  • Free Private VPN
  • Anti-theft Features
  • Custom Lock screen app
  • Harassment/ Spam Call Intercept

இதில் இப்படி பல அம்சங்கள் நிறைந்திருந்தாலும், இதில் வரும் விளம்பரங்கள் (Advertisements) பயனாளிகளுக்கு வெறுப்பினை தருகிறது. ஆனால், பயன்பாட்டிற்கான பிரீமியம் சந்தாவைத் (premium subscription) தேர்ந்தெடுப்பதன் மூலம் அதைத் தவிர்க்கலாம்.

ஆண்ட்ராய்டுக்கான இச்செயலியை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும் Private Zone

இவ்வறை தவிர இன்னும் ஏராளமான செயலிகள் கூகுள் பிளேவில் உள்ள அவ்வற்றில் சில F-Stop Gallery, Secret Calculator மற்றும் Piktures போன்றவை.

நீங்கள் உங்கள் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் எவ்வாறு பாதுகாப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தால், மேலே குறிப்பிட்ட செயலிகளில் ஏதாவது ஒன்று கண்டிப்பாக உங்களுக்கு உதவும் என்று உறுதியாக நம்புகிறேன்.

நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்