ஸ்ட்ரீமிங் மியூசிக் சேவைகளின் மூலம் உலகிலுள்ள அனைத்து இசைக் கலைஞர்களுக்களின் இசை தொகுப்புகளை கேட்க முடியும், மேலும் இவை இசை நூலகத்தை (Music Library) நிர்வகிப்பதற்கான நேரத்தை செலவழிக்க விரும்பாத மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஸ்ட்ரீமிங் மியூசிக் சேவைகளை வழங்கும் பெரும்பாலான செயலிகள் பயனர்கள் உறுப்பினராக இருந்தால் மட்டுமே இசையைப் பதிவிறக்க அனுமதிக்கின்றன.

இசை கேட்பதை நீங்கள் விரும்பினால், உங்களுக்கு சிறந்த அனுபவத்தை தரும் நல்ல ஆப்லைன் மியூசிக் பிளேயர் அவசியம். ஒரு நல்ல ஆப்லைன் மியூசிக் பிளேயர் கவர்ச்சிகரமான வடிவமைப்பை கொண்டு இருந்தால் மட்டும் போதாது, இசைத் தொகுப்புகளை எளிதாக வகைப்படுத்தும் அமைப்புகளை கொண்டு இருக்க வேண்டும். மேலும் இது அனைத்து முக்கிய இசை பார்மெட்களையும் ஆதரிக்க வேண்டும். அண்ட்ராய்டில் நூற்றுக்கணக்கான இலவச மற்றும் பேய்டு மியூசிக் பிளேயர்கள் உள்ளன, ஆனால் அவை எல்லாமே அடிப்படைகளை தேவைகளை நிறைவேற்றவில்லை.

ஆனால் நாம் இக்கட்டுரையில் இசையை ஆப்லைனில் எடுத்துக்கொள்ள அனுமதிக்கும் சில சிறந்த ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளை குறித்து காண்போம்.

Gaana

இந்திய வாடிக்கையாளர்களுக்கு Gaana ஒரு நல்ல இசை ஸ்ட்ரீமிங் பயன்பாடாகும். இது இந்திய சினிமா நிறுவனங்களிடம் கொண்டுள்ள ஒப்பந்தத்தால் ஒரு படத்தின் இசைத்தொகுப்புகள் அனைத்தையும் பிற இசை ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியிடுவதற்கு முன்னே இதில் பிரத்யேகமாக வெளியிடுகின்றன. இதற்கு காரணம் இது இந்திய இசையில் அதிக கவனம் செலுத்துவதே. மேலும் இது சர்வதேச இசைத் தொகுப்புகளையும் வழங்குகிறது.

இசை ரசிகர்களின் தேவையினைப் பூர்த்தி செய்ய இதில் 30 மில்லியன் இசை ஆல்பங்கள் உள்ளன. இறுதியாக, இது பல பிரபலமான இந்திய வானொலி நிலையங்களை பயன்படுத்தவும் அனுமதி வழங்குகிறது. கூடுதலாக, நீங்கள் கட்டணச் சந்தாதாரர் என்றால், கானாவில் நீங்கள் பாடல்களைப் பதிவிறக்கி, இணையம் இல்லாத நேரத்தில் அவற்றைக் கேட்கவும் முடியும்.

Saavn Music

இந்திய இசை ரசிகர்களை குறிவைத்துள்ள மற்றொரு இசை ஸ்ட்ரீமிங் செயலி சாவ்ன் ஆகும், இது இந்திய பாடல்களில் கவனம் செலுத்துவதற்காக மில்லியனுக்கும் அதிகமான பாடல்களை கொண்டுள்ளது.

சவானின் சிறப்பு இதில் பிளேலிஸ்ட்கள் சிறப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளன, இதன் மூலம் நம் மனநிலைமைக்கு ஏற்றவாறு பாடல்களை எளிதாக மாற்ற முடியும். பாடல்கள் மட்டுமில்லாமல், இது பாட்கேஸ்ட்ஸ் மற்றும் வானொலி நிலையங்களுக்கான அணுகலை வழங்குகிறது. இதன் மற்றோரு சிறப்பு உயர் தரமான 320 kbps ஆடியோவினை பதிவிறக்க ஆதரிக்கின்றது.

Amazon Music

நீங்கள் அமேசானின் பிரைம் உறுப்பினர் என்றால், அமேசான் இசையின் ஸ்ட்ரீமிங் பயன்பாட்டினை இலவசமாக பெறலாம். ஒருவேளை நீங்கள் அமேசானின் பிற பிரதான சேவைகளான Amazon Prime Videos, Faster delivery மற்றும் Steeper discounts போன்றவற்றை அனுபவிக்காவிட்டாலும், Amazon Music உங்கள் பணத்தின் மதிப்பிற்கு திருப்த்தி அளிக்கும். இங்கே உள்ள பாடல்களின் சேகரிப்பு Saavn மியூசிக் மற்றும் Gaana போன்றவற்றை விட சிறியது என்றாலும், இதில் பிரபலமான பாடல்கள் ஏராளம் இடம் பெற்றுள்ளன.

மேலும் இதில் உங்களுக்கு விருப்பமான பாடல்களைப் பதிவிறக்கி, ஆப்லைனில் அவற்றை இசைக்க முடியும். மலிவு கட்டணத்தில் இசை ஸ்ட்ரீமிங் சேவையை தேடும் யாருக்கும் இதனை நீங்கள் கண்டிப்பாக பரிந்துரைக்கலாம்.

நான் இந்த பயன்பாடுகளை தனிப்பட்ட முறையில் முயற்சித்தேன் மற்றும் சோதித்திருக்கிறேன் மேலும் நீங்களும் இவற்றைப் பயன்படுத்தி இதன் செயல்பாடுகளை அனுபவிப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் உங்களுக்குப் பிடித்த பயன்பாடு எது என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்