கருப்பு வெள்ளி (Black Friday) பற்றி தான் இப்போது இணையத் தளங்களில் பேச்சு, அது என்ன கருப்பு வெள்ளி என நீங்கள் கேட்கலாம், இத்தினம் இவ்வருடத்தின் நவம்பர் மாதம் 23 ஆம் தேதி அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது, இத்தினத்தில் நாம் இந்தியாவில் இருந்து கொண்டே, அமெரிக்காவில் உள்ள ஆன்லைன் ஸ்டோர்ஸிலிருந்து நமக்கு விருப்பமான கேஜெட்களை சிறந்த ஆப்பரில் வாங்கலாம். ஆம் நீங்கள் நினைப்பது சரியே, இது நம்மூரில் உள்ள பிளிப்கார்டின் பிக் பில்லியன் டேஸ் அல்லது அமேசானின் கிரேட் இந்தியன் சேல்ஸ் போன்றது.

சில முக்கிய விற்பனையாளர்கள் ஏற்கனவே கறுப்பு வெள்ளிக்கு முன்பே சில ஆப்பர்களை வழங்கத் தொடங்கிவிட்டனர். மேலும் ஆயிரக்கணக்கான ஆப்பர்கள் மற்றும் சலுகைகள் பிளாக் ப்ரைடே அன்று வழங்கப்பட உள்ளன. ஆனால் இவை அனைத்தும் நமக்கு கட்டுப்படி ஆகுமா என்று பார்ப்போம்.

இந்தியாவில் இருந்து கொண்டு பிளாக் ப்ரைடே அன்று என்ன பொருள் வாங்கலாம்

பிளாக் ப்ரைடே விற்பனையில் பல கேஜெட்டுகள் சிறந்த ஆப்பர்களில் வழங்கப் படுகின்றன. எடுத்துக்காட்டுக்கு மெமரி கார்டுகள், வயர்லெஸ் ரௌட்டர்ஸ், கணினி பாகங்கள், ஸ்பீக்கர்கள் மற்றும் ஸ்மார்ட் ஹவுஸ் உபகரணங்கள் ஆகியவை பிளாக் ப்ரைடே தினத்தில் நீங்கள் வாங்கக் கூடிய சில முக்கிய பொருட்கள்.

அடுத்து முக்கியமாக Honor நிறுவனம் அதன் வலைத்தளத்தில் பிளாக் ப்ரைடே விற்பனையை வழங்கி வருகிறது, இதில் இந்தியாவில் விற்பனை ஆகும் ஸ்மார்ட்போன்களுக்கு பல தள்ளுபடிகள் உள்ளன.

Honor 7S இன் விலை ரூபாய் 5,999, Honor 9N இன் விலை ரூபாய் 11,999, Honor Play இன் விலை ரூபாய் 19,999 மற்றும் இன்னும் பல ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி விற்பனையில் உள்ளன. மேலும் இந்நிறுவனம் Re. 1 இக்கு Honor 8X என்ற ஸ்மார்ட்போனை நவம்பர் 20 11:45am IST க்கு விற்பனை செய்கிறது. 4GB ரோம் மற்றும் 64 GB இன்டர்னெல் மெமரி கொண்ட இதன் ஒரிஜினல் விலை ரூபாய் 14,999 ஆகும்.

அதுமட்டும் இல்லாமல் சோனி இந்திய நிறுவனம் PS4 கேம்களுக்கு சிறப்பு தள்ளுபடியினை அறிவித்துள்ளது, அவை

  1. Spider Man – ரூபாய் 2,499 (MRP is ரூபாய் 3,999)
  2. God of War – ரூபாய் 1,999 (MRP is ரூபாய் 3,999)
  3. Horizon Zero Dawn Complete Edition – ரூபாய் 1,999 (MRP is ரூபாய் 2,999)
  4. Uncharted Lost Legacy – ரூபாய் 1,499 (MRP is ரூபாய் 2,499)
  5. Knack 2 – ரூபாய் 1,499 (MRP is ரூபாய் 2,499)

மேலும் GoodOffer24.com என்ற வலைத்தளம் பிளாக் ப்ரைடே அன்று மென்பொருட்களுக்கு சிறந்த தள்ளுபடியினை வழங்குகிறது. உங்களின் பழைய மைக்ரோசாப்ட் ஆபீஸ் பயன்பாடுகளை அப்கிரேடு செய்வதற்கு நீங்கள் நினைத்தால் இது சரியான நேரம்.

  1. Microsoft Office 2019 Professional Plus CD-KEY (1PC) at $55.27
  2. Microsoft Office 2019 Professional Plus CD-KEY (5PC) at $241.20

இதைப் போன்று அமேசான் இந்திய நிறுவனம் பிளாக் ப்ரைடே தினத்தை முன்னிட்டு நவம்பர் 23 முதல் 26 வரை இன்டர்நேஷனல் பிராண்டுகளுக்கு நாற்பது சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது.

பிளாக் ப்ரைடே அன்று நாம் தவிர்க்க வேண்டிய சில செயல்கள்

அமெரிக்காவிலிருந்து ஷிப்மென்ட் செய்யக்கூடிய மிகப்பெரிய பொருட்கள் எதையும் தவிர்க்கவும், எடுத்துக்காட்டுக்கு LED தொலைக்காட்சிகள், ஏர் கண்டிஷனர் முதலியன. எதற்காக என்றால் இதன் ஷிப்மென்ட் சார்ஜ்கள் அதிகமா இருக்கும், இந்திய மதிப்பில் ஒப்பிடுகையில் அத்தகைய சாதனங்களை நாம் இந்தியாவிலேயே வாங்கி விடலாம்.

பிளாக் ப்ரைடே விற்பனைக்கு நாம் எவ்வாறு தயாராவது

பொருட்களை வாங்குவதற்கு முன்னர் அனைத்து முக்கிய ஆன்லைன் தளங்களிலும் விலைகளை ஒப்பிடுக. ஒருவேளை நீங்கள் நேரடியாக பொருட்களை இந்தியாவுக்கு அனுப்பாத வலைத்தளங்களில் ஷாப்பிங் செய்ய போகிறீர்கள் என்றால், முன்கூட்டியே வேறு ஏதும் மூன்றாம் தரப்பு (Third Party) ஷிப்பிங் சேவைகள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறோம், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

2 thoughts on “பல தள்ளுபடிகளை வழங்கும் பிளாக் ப்ரைடே”

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்