பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 491-க்கு பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது . இது இந்தியாவில் மிக குறைந்த பிராட்பேண்ட் திட்டமாக கூறப்படுகிறது, இந்த திட்டத்தின் மூலம், வாடிக்கையாளருக்கு தினசரி 20 ஜீபி டேட்டா 20 Mbps வேகத்தில் கிடைக்கும். மேலும் இதன் மூலம் அனைத்து நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் செய்து கொள்ளலாம்.

இதன் மூலம் தனிநபர் மற்றும் சிறு தொழில்முனைவோர் பயன் பெறுவார்கள்.

பிராட்பாண்ட் சேவையில் முன்னணியில் இருக்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் தன்னுடைய மொபைல் மற்றும் பிராட்பேண்ட் திட்டங்களின் கட்டணங்களை மாற்றியமைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்