CES என்பது வருடம் தோறும் நடைபெறும் ஒரு தொழில்நுட்ப வர்த்தக நிகழ்ச்சியாகும். இதில் பல்வேறு பிரபல தொழிற்நுட்ப நிறுவனங்கள் கலந்துக் கொண்டு தங்களின் புதிய தொழில்நுட்பங்களை மக்களின் பார்வைக்கு அறிமுகப்படுத்துகின்றன. இதன் மூலம் வருங்காலத்தில் தொழில்நுட்பங்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழலாம் என்பதனை நம்மால் அறிய முடியும்.

அப்படிதான் இந்த வருடத்திற்கான CES நிகழ்வு அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் சில தயாரிப்புகள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அவ்வற்றை பற்றி இக்கட்டுரையில் சற்று விரிவாக பார்ப்போம்.

Samsung MicroLED TV

The Wall என்று அழைக்கப்படும் சாம்சங் நிறுவனத்தின் இந்த MicroLED டிவியின் அளவு 219 இன்ச் ஆகும். இது QLED-யை விட சிறந்த துல்லியத்தை தரும் என சாம்சங் நிறுவனம் நம்பிக்கை அளித்துள்ளது. இதனை தாண்டி இதில் இன்னொரு முக்கிய சிறப்பு அம்சம் ஒன்று உள்ளது.

அது, நாம் நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு டிவியின் வடிவத்தை மாற்றி அமைத்து கொள்ளும் வசதி, ஆம் இதில் பல சிறிய டிஸ்பிளே பாகங்கள் உள்ளன. இவ்வறை ஒன்றிணைத்து நம் தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். எனினும் இவை எப்போது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Picture Courtesy: Samsung MicroLED TV

Alienware Area-51 m

கேம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது இந்த டெல் நிறுவனத்தின் Alienware Area-51 m லேப்டாப்.குறிப்பாக இதில் உள்ள 144 hz Full HD டிஸ்ப்ளே மற்றும் RTX 2080 GPU யூனிட் அனைவரும் அதிர வைத்துள்ளது. மேலும் இதில் உள்ள பாகங்களை உங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளலாம். காரணம் இதில் உள்ள பாகங்கள் அனைத்தும் modular வகையை சார்ந்தவை. மேலும் இது இதுவரை வந்த லேப்டாப்களிலேயே அதிக சக்தி வாய்ந்ததாக அறியப்படுகிறது.

Royale Flexpai

அனைவரும் எதிர்ப்பார்த்த போல்டபிள் போனை (Foldable Phone) CES பார்வையாளர்களுக்காக, சீனாவின் ஸ்டார்ட்அப் நிறுவனமான Royole beat அறிமுகப்படுத்தி உள்ளது. 7.8 இன்ச் மடிப்புகளுடனான இந்த டேப்லெட்-போன் உலகின் முதல் Foldable Phone ஆகும். 2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இதன் விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பெயர் FlexPai. இதனை டேப்லெட்டாகவும் மற்றும் போனாகவும் ஒரே நேரத்தில் மாற்றிக்கொண்டு பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஹார்லி டேவிட்சன் Livewire

ஹார்லி டேவிட்சன் தனது முதல் எலக்ட்ரிக் பைக்கான Livewire-யை தற்போது CES வர்த்தக நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 177 கிலோமீட்டர் வரை பயன்படுத்திக் கொள்ளாலாம், மேலும் இது மணிக்கு 0-விலிருந்து 100 கிலோமீட்டர் வேகத்தினை வெறும் 3.5 விநாடிகளில் எட்டுகிறது. இதன் விலை இந்திய ரூபாயில் சுமார் 21 லட்சம் என அறியப்படுகிறது. இதன் முதல் விற்பனை அமெரிக்காவில் இந்த வருடம் தொடங்க உள்ளது. விரைவில் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படலாம்.

LG Signature OLED TV

LG நிறுவனம் தனது Signature OLED டிவியை இந்த வருடம் CES ல் காட்சிக்கு வைத்திருந்தது, மற்ற டிவிக்களைப் பார்க்கிலும் இதில் ஒரு சிறப்பு அம்சம் ஒன்று உள்ளது, இதனை நீங்கள் பயன்படுத்தாத வேளைகளில் சுருண்டி வைத்துக் கொள்ள முடியும். இதன் விற்பனை மார்ச் மாதம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இது இந்த வருடத்திற்கான CES நிகழ்ச்சியில் முக்கிய கவனம் ஈர்க்கும் தொழில்நுட்பமாக அமைந்தது.

இவை அனைத்தும் ஒரு சிறு துளி தான், இவற்றையும் தாண்டி பல்வேறு நிறுவனங்களின் பல தயாரிப்புகள் இடம் பெற்றிருந்தன.

குறிப்பு:- மற்ற வருடத்தை போல இந்த வருடமும் ஆப்பிள் நிறுவனம் CES ல் பங்குகொள்ளவில்லை.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்