மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது, சிலர் தங்களின் கவனக்குறைவினால் மொபைல் போனை தவறவிடுகின்றனர், இதனால் போனின் தொடு திரை சிதைவடைகிறது, இவ்வாறு சிதைவடைந்த தொடு திரையை சரி செய்ய ஆகும் செலவும் அதிகம்.

இதனை கருத்தில் கொண்டு கார்னிங் நிறுவனம் தற்பொது கொரில்லா கிளாஸ் 6-ஐ அறிமுகம் செய்துள்ளது.

கார்னிங் (Corning) நிறுவனமானது மொபைல் போன்களுக்கான பாதுகாப்பான தொடு திரையை வடிவமைத்து தரும் நிறுவனமாகும்.

முன்னணி மொபைல் நிறுவனங்கள் அனைத்து கார்னிங் நிறுவனத்தின் கொரில்லா கிளாஸைதான் பயன்படுத்துகின்றனர்.

இதன் சிறப்பு 1 மீட்டர் உயரத்தில் இருந்து மொபைல் போன் எத்தனை முறை கீழே விழுந்தாலும் மொபைலின் தொடு திரை உடையாது என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இது கொரில்லா கிளாஸ் 5-ஐ விட மிக சிறப்பானதாக இருக்கும் என்று கார்னிங் நிறுவனத்தார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்