வாட்ஸாப்ப் நம்முடைய வாழ்க்கையுடன் பிணைக்கப்பட்டுள்ளது,

நாம் நம்முடைய நண்பர்களை, குடும்பத்தினரை அல்லது வியாபார நண்பர்களை தொடர்பு கொள்ள வாட்ஸாப்பை பயன்படுத்துகிறோம்.

இக்கட்டுரையில் வாட்ஸாப்பில் உள்ள Group மற்றும் Broadcast list இன் வேறுபாடுகள் குறித்து காண்போம்.

வாட்ஸாப்ப் குழு ஒரு கூட்டு குடும்பம் போன்றது. இதில் அனைத்து உறுப்பினர்களும் வாட்ஸாப்ப் குழுவாக அறியப்படும் ஒரு வீட்டில் தங்கியிருப்பார்கள், எடுத்துக்காட்டாக குடும்பத்தின் தலைவர் (குழு நிர்வாகி) அதிக உரிமைகள் மற்றும் அதிகாரங்களைக் கொண்டிருப்பார்.

Broadcast list இல் நீங்கள் இணைக்கப்பட்டிருந்தால், நீங்கள் Broadcast பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளீர்கள் என்பதை உங்களுக்கு தெரிவிக்காது.

Broadcast list இல் எந்த ஒரு உரையாடலும் இருப்பதில்லை, இது One to many வழிமுறை சார்ந்தது.

வாட்ஸாப்பில் குழுக்கள் என்பது CC (Carbon Copy) போன்றது, Broadcast என்பது BCC (Blind Carbon Copy) போன்றது.

வாட்ஸாப்ப் குழுவில் ஒருவர் செய்தி அனுப்பினால், ஒவ்வொரு குழு உறுப்பினரும் அதை பார்க்க முடியும். ஆனால் Broadcast பட்டியல்களில் செய்தியை அனுப்பியவருக்கு மட்டுமே பதில் செய்தி அனுப்ப முடியும். இது ஒரு தனிப்பட்ட உரையாடலாகும்.

குழுக்கள் மற்றும் ஒளிபரப்பு பட்டியல்களில் 256 வரையிலான நபர்களை இணைக்க முடியும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்