பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் இதுவரை ஒருவர் தாங்கள் அனுப்பிய மெசேஜை அழிக்க முடியாத நிலைமை இருந்தது. நீங்கள் உங்கள் சொந்த இன்பாக்ஸிலிருந்து மெசேஜை நீக்கிவிட்டாலும், அந்தச் மெசேஜ்கள் பெறுநரின் இன்பாக்ஸில் இருக்கும்.

ஆனால் தற்போது பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருவர் தான் அனுப்பிய மெசேஜ்ஜை அவரே Unsend செய்யும் வசதி மிகவிரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால் ஒருவேளை நாம் சிலருக்கு தவறுதலாக அனுப்பிய செய்திகளை, மறுமுனையில் இருப்பவர் பார்க்கும் முன் அழித்து விடலாம்.

மேலும், தொழில்நுட்ப வல்லுநர் ஜேன் மஞ்சுன் வோங் பேஸ்புக்கின் unsend அம்சத்தை குறித்த செய்தியை ட்வீட் செய்துள்ளார்.

ஏற்கெனவே, இந்த ஆண்டின் தொடக்கத்தில் பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க்கரால் அனுப்பப்பட்ட சில பழைய மெசேஜ்கள் இரகசியமாக நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து சாதாரண பேஸ்புக் பயனர்களுக்கு இந்த வசதி வழங்கப்படும் என அப்போதே பேஸ்புக் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்