பேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களுக்காக டேட்டிங் செயலி ஒன்றை உருவாக்கி வருவதாக இந்த ஆண்டு மே மாதம் நடைப்பெற்ற F8 மாநாட்டில் முதன்முதலாக அறிவித்தது.

இவ்வளவு மாதங்கள் காத்திருப்புக்கு பின், பேஸ்புக் இன் டேட்டிங் செயலி சோதனை முயற்சிக்காக இன்று கொலம்பியா நாட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

சோதனை முயற்சிகள் முடிவடைந்தவுடன் இந்தியா உட்பட பிற நாடுகளிலும் வெளியிடப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் அறிவிப்பின் படி, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் டேட்டிங் சேவைக்கு என தனியாக இதில் சுயவிவரங்களை (Profiles) உருவாக்கி கொள்ள முடியும்.

உங்கள் சுயவிவரம் அமைக்கப்பட்டவுடன், உங்களுக்கு பொருந்தும் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மற்றவர்களின் தகவல்களை இது உங்களுக்கு அறிவிக்கும்.

இது ஏற்கனவே சந்தையில் உள்ள Tinder மற்றும் Bumble போன்ற டேட்டிங் செயலிகளுக்கு போட்டியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்