கடந்த ஆண்டு, பேஸ்புக் தனது video-on-demand சேவையை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியது, இது பேஸ்புக் வாட்ச் பார்ட்டி (Facebook Watch Party) என அழைக்கப்படுகிறது. தற்போது இதன் சேவை உலகளாவிய ரீதியில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கிறது.

ஒருவேளை நீங்கள் பேஸ்புக் வாட்ச் பார்ட்டிக்கு புதியவர் என்றால், இதில் உள்ள சில சுவாரசியமான விஷயங்கள் குறித்து நீங்கள் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்னர் பேஸ்புக் வாட்ச் பார்ட்டி பற்றி முதலில் புரிந்து கொள்வோம்.

பேஸ்புக் வாட்ச் பார்ட்டி என்றால் என்ன

உதாரணமாக, ஒன்றாக ஒரு திரைப்படத்தை அல்லது விடியோவை பார்ப்பதற்கு நீங்கள் உங்கள் நண்பரை உங்கள் வீட்டிற்கு அழைக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம், சரி, நம்மில் சிலர் அதைச் செய்கிறார்கள். ஆனால் உங்கள் நண்பர்கள் அதே நகரத்தில் இல்லை என்றால் எவ்வாறு திரைப்படத்தை ஒன்றாகக் காண்பது? நிச்சயமாக நீங்கள் விரும்பும் திரைப்படத்தை உங்களின் சாதனத்தில் பிளே செய்து விட்டு படம் குறித்த அனுபவத்தை சாட் அமைப்பின் வழியாக உங்கள் நண்பருடன் சாட் மட்டும் தான் செய்ய முடியும், ஆனால் இது திரைப்படத்தை ஒன்றாக பார்த்தத்திற்கான அனுபவத்தை நமக்கு தராது.

இதற்காகவே பேஸ்புக் நிறுவனம் வாட்ச் பார்ட்டி என்பதனை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் பங்கேற்பாளர்கள் பேஸ்புக் வீடியோக்களை ஒரே நேரத்தில் பார்வையிடலாம் மேலும் இது கருத்து தெரிவிக்க கூடிய பகிர்வு அனுபவத்தையும் நமக்கு வழங்குகிறது.

சரி, பேஸ்புக் வாட்ச் பார்ட்டி எப்படி வேலை செய்கிறது

முதலில் பேஸ்புக் வாட்ச் பார்ட்டியில் வீடியோக்களைக் காண உங்களின் பேஸ்புக் கணக்கிலிருந்து உங்கள் நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் மற்ற உறுப்பினர்களைக் காண முடியும் மற்றும் வீடியோவைப் பற்றி அவர்களுடன் கலந்துரையாட முடியும்.

முன்பு இந்த அம்சம் பேஸ்புக் குழுக்களுக்கு (Facebook Groups) மட்டுமே கிடைத்தது, ஆனால் இதனை தற்போது பேஸ்புக் பக்கங்களிலும் (Facebook Pages) மற்றும் தனிப்பட்ட சுயவிவரங்களிலும் (Facebook Personal Profiles) பயன்படுத்தலாம்.

பேஸ்புக் வாட்ச் பார்ட்டியை எவ்வாறு உருவாக்குவது

மொபைல் சாதனங்களில் பேஸ்புக் வாட்ச் பார்ட்டினை தொடங்க, Create post என்பதனை கிளிக் செய்க. பின்னர் இதில் Watch Party ஐ தேர்ந்தெடுக்கவும். இந்த வழிமுறைகள் பேஸ்புக்கை கணினியில் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு பொருந்தும்.

பார்ட்டியின் தலைப்பு முக்கியமானது, இது உங்கள் நண்பர்கள் இது பற்றி தெரிந்து கொள்ள அவர்களுக்கு உதவும்.

துரதிருஷ்டவசமாக, நீங்கள் பேஸ்புக் வீடியோக்களை மட்டுமே இதில் சேர்க்க முடியும். தற்போது, ​​பேஸ்புக் நெட்பிக்ஸ், யூடிப் போன்ற வீடியோ தளங்களில் உள்ள வீடியோக்களை சேர்க்க அனுமதிக்காது. நீங்கள் வாட்ச் பார்ட்டியை உருவாக்கிய பிறகு வீடியோக்களைச் சேர்க்கலாம் அல்லது நீக்கலாம்.

ஒருவேளை நீங்கள் பிஸியாக இருக்கிறீர்கள் என்றால், இதில் அட்மினாக உங்கள் நண்பரை நீங்கள் சேர்த்து விடலாம், இதன் மூலம் புதிய வீடியோக்களை சேர்க்க மற்றும் வீடியோக்களை கட்டுப்படுத்த அவருக்கு அனுமதி வழங்கப்படும்.

பேஸ்புக் வாட்ச் பார்ட்டி vs பேஸ்புக் லைவ்

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம் பேஸ்புக் வாட்ச் பார்ட்டிக்கும், பேஸ்புக் லைவ்க்கும் என்ன வித்தியாசம் என்று, பார்ப்போம். எளிய முறையில் கூற வேண்டுமென்றால், பேஸ்புக் லைவ் என்பது நேரலையாக எடுக்கப்பட்ட புதிய வீடியோ, ஆனால் பேஸ்புக் வாட்ச் பார்ட்டி ஏற்கனவே இருக்கும் பழைய பேஸ்புக் வீடியோக்களைப் பயன்படுத்துகிறது.

பேஸ்புக் வாட்ச் பார்ட்டி சமூக வலைப்பின்னலின் (Social network) மற்றொரு முயற்சியாகும். ஒருவேளை பயனர்கள் இதனை பழகி கொள்ள சில நேரம் ஆகலாம்.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பேஸ்புக் வாட்ச் பார்ட்டி பற்றிய உங்கள் எண்ணங்களை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்