பேஸ்புக் நிறுவனத்தின் ‘மெசன்ஜர் கிட்ஸ்’ ஆப் கடந்த ஆண்டு அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

வீடியோ அழைப்புகள் மற்றும் மெசேஜிங் வசதிகள் இந்த ‘மெசன்ஜர் கிட்ஸ்’ app-ல் உள்ளது, இது 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்காக என சிறப்பாக வடிவமைக்க பட்டுள்ளது,

ஆனால் இதற்கான எதிர்ப்பு அமெரிக்கா முழுவதும் அதிகமாக உள்ளது, நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் நல ஆய்வாளர்கள் இந்த app-ஐ தடை செய்ய கோரி பேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜூக்கர்பர்க்கிற்கு கடிதம் எழுதினர் உள்ளனர்.

ஆனால் அதற்கு ஃபேஸ்புக் நிறுவனம், ஆய்வாளர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பார்க்கும் ​மாற்றங்களை கொண்டு வருவோம் என உறுதி அளித்துள்ளது.

மிக விரைவில் பேஸ்புக் நிறுவனத்தின் ‘மெசன்ஜர் கிட்ஸ்’ ஆப் இந்தியாவிலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்