குறுகிய காலகட்டத்தில் மிகப் பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது டிக்டோக். முதலில் மியூசிக்கலி என்று அழைக்கப்பட்ட இது தற்போது டிக்டோக் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, இதன் வளர்ச்சி மற்ற சமூக வலைத் தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்றவற்றுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கிறது என்பதே உண்மை.

டிக்டோக்கின் இந்த அசூர வளர்ச்சிக்கு காரணம் என்ன

டிக்டோக் இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பாக பெண்கள் மத்தியில் மிக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது, இச்செயலியின் மீது பல எதிர்மறை விமர்சனங்கள் எழுந்த போதிலும் இதை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதான் செல்கிறது, இது இவ்வளவு பெரிய வரவேற்பை பெற்றுள்ளதிற்கு காரணம் இதன் எளிமையாக பயன்பாடு, இதனை அனைத்து வயதினரும் எளிதாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இதில் நாம் நமக்கு இருக்கும் திறமையை நடிப்பு வழியாகவோ அல்லது நடனம் வழியாகவோ வெளிப்படுத்த முடியும்.

தற்போது யாரும் அதிக நேரம் பேஸ்புக்கை பயன்படுத்துவது இல்லை, அதற்கு மாற்றாக மக்களின் கவனம் தற்போது டிக்டோக் போன்ற செயலிகளை நோக்கி உள்ளது. எனவே இதை கருத்தில் கொண்டு பேஸ்புக் நிறுவனம் லஸ்ஸோ (Lasso) எனும் புதிய செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.

சரி நாம் எதற்கு இன்று டிக்டோக் குறித்து காண்கிறோம்

தற்போது பேஸ்புக் தனது பெரும்பான்மை இடத்தை இழந்து வருகிறது, எனவே தனது இடத்தை தக்க வைத்து கொள்ள டிக்டோக்கிற்கு போட்டியாக லஸ்ஸோ (Lasso) எனும் புதிய செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது பேஸ்புக் நிறுவனம். இது கண்டிப்பாக டிக்டோக் செயலிக்கு போட்டியாக இருக்கும் என பேஸ்புக் உறுதியளித்துள்ளது.

லஸ்ஸோ (Lasso) வை எவ்வாறு பயன்படுத்துவது

இதனை நாம் ஏற்கனவே பயன்படுத்தும் பேஸ்புக் கணக்கின் வழியாக லாகின் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம், இதன் வடிவமைப்பும், செயல்பாடும் டிக்டோக் செயலியை ஒத்துள்ளது, ஆம் இதில் டிக்டோக் செயலியில் உள்ளதைப் போன்று எடிட்டிங் மற்றும் பில்டர் வசதிகள் கொடுக்கப் பட்டுள்ளன, இதில் நாம் உருவாக்கும் வீடியோக்களை எளிதாக ஷேர் செய்யும் வசதியும் கொடுக்கப் பட்டுள்ளது.

இச்செயலி ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்கு தளங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் இதனை தற்போது இந்தியாவில் பயன்படுத்த முடியாது, இது தற்போது அமெரிக்காவில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுக்கு எப்போது இந்த செயலி அறிமுகப்படுத்தப்படும் என்ற சரியான தகவல் பேஸ்புக் நிறுவனம் தரப்பில் வெளியிடப்படவில்லை.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறோம், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்