சமூக வலைத்தளங்களில் முன்னணியில் இருக்கும் facebook அடுத்த தலைமுறைக்கான தொழில் நுட்பத்தில் பணி புரிந்து வருகிறது.

இதன் நோக்கம் உலகம் முழுக்க இணைய சேவையை வழங்குவது,

இதற்காக பேஸ்புக் நிறுவனம், சிறப்பு செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளுக்கு Athena என பெயர் வைத்துள்ளது. இதன் மூலம் உலகின் அனைத்து பகுதிகளுக்கும் பிராட்பேண்ட் சேவையை வழங்க முடியும்.

ஆனாலும் இத்திட்டத்தைக் குறித்து முழுமையான தகவல் facebook நிறுவனத்தால் தெரிவிக்கப்படவில்லை.

இத்திட்டம் 2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்