டீப் வெப் (Deep Web) என்பது உலகளாவிய இணையத்தின் ஒரு பகுதியாக உள்ளது, மேலும் இது கண்ணுக்கு தெரியாத அல்லது மறைக்கப்பட்ட இணையமாக (Hidden web) அறியப்படுகிறது. Deep Web உள்ள தகவல்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக எந்த தேடு பொறிகளிலும் குறிப்பிடப்படவில்லை, எனவே கூகிள், யாகூ போன்ற தேடு பொறிகளின் மூலம் Deep Web உள்ள தகவல்கள் எதையும் கண்டுபிடிக்க முடியாது.

இணையத்தில் எளிதில் அணுகக்கூடிய பேஸ்புக், யூடியூப் மற்றும் ஈகாமர்ஸ் வலைத்தளங்கள் Deep Web வலைத்தளத்திற்கு எதிர் முனையாகும்.

மேலும் இக்கட்டுரையில் Deep Web குறித்த நம்பமுடியாத உண்மைகளை காண்போம்

நாம் தற்போது பயன்படுத்தும் இன்டர்நெட்டில் 88% மறைக்கப்பட்ட வலைத்தளங்களாக Deep Web உள்ளது. நாம் வெறும் 12% வலைத்தளங்களைத்தான் இன்டர்நெட்டில் பயன்படுத்துகிறோம் என்பதே உண்மை.

Deep Web பில் மக்கள் தங்களின் சொந்த அடையாளத்தை மறைத்து எந்தவித தயக்கமும் இன்றி மிக அதிர்ச்சியூட்டும் காரியத்தை செய்கிறார்கள். டீப் வெப் ட்ராப் (Deep Web trap) மூலம் மில்லியன் கணக்கான மக்கள் கடத்தப்பட்டு போதை மருந்து கடத்தல் மற்றும் விபச்சாரம் போன்ற சில சட்டவிரோத செயல்களுக்காக பயன்படுத்தப்படுகிறர்கள்.

டீப் வெப் பற்றிய மிகவும் பிரபலமான விஷயங்களில் ஒன்று, இதில் பிரீமியம் தரம் போதை மருந்து முதல் சாதாரண மருந்து வரை எந்தவொரு சட்டபூர்வமான பிரச்சினையுமின்றி இரகசியமாக முறையில் பெற முடியும். சப்ளையர்கள் போதை மருந்தினை மிகவும் பாதுகாப்பாக, புத்திசாலித்தனமாக பேக்கிங் செய்து டெலிவரி செய்கின்றன.

உள்ளூர் கடைகளில் இருந்து வாங்க முடியாத மருந்துகள், ஆயுதங்கள் போன்றவற்றை டீப் வெப் மூலம் வாங்க முடியும் ஆனால் இதனைப் பெற சாதாரண பணம் (Cash) அல்லது காசோலைகளை (Cheque) பயன்படுத்த முடியாது. டீப் வெப் Bitcoin எனப்படும் வேறுபட்ட நாணயத்தை பயன்படுத்துகிறது, இது இணையத்தில் மட்டுமே கிடைக்கும், இதற்கு எந்த அரசாங்கத்தின் பங்கும் இல்லை. மேலும் பிட்காயின், டீப் வெப்பில் சட்டவிரோத தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கும், வாங்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

டீப் வெப்பிலிருந்து பாஸ்போர்ட் போன்ற போலி அடையாள சான்றுகளை மக்கள் வாங்க முடியும்.

டீப் வெப்பில் உள்ள தகவல்களின் தரமானது நாம் மேற்பரப்பில் பயன்படுத்தும் இணையதளங்களில் கிடைக்கும் தகவல்களை விட 3000 மடங்கு சிறந்ததாகும். இதில் உங்களுக்குத் தேவைப்படும் எந்த ஒரு தகவலையும் பெற முடியும்.

நீங்கள் நேரடியாக டீப் வெப்பினை பயன்படுத்த முடியாது இதற்கு டோர் (Tor) என்ற பிரௌசரை பயன்படுத்த வேண்டும், இதற்கு அமெரிக்க அரசு துறை (US Department of State) நிதியுதவி செய்கிறது. மேலும் இதில் நீங்கள் சில தடை செய்யப்பட்ட புத்தகங்களையும் படிக்கலாம்.

மேலும், ஊடகவியலாளர்கள் (Journalists) தங்களின் ரகசிய தகவல்களை பரிமாற்றுவதற்கு டீப் வெப்பினை பயன்படுத்துகின்றனர். மேலும் டீப் வெப்பானது அடையாளம் இல்லாத (Anonymous Email services) மின்னஞ்சல் சேவைகளை வழங்குகிறது.

அனைத்து வகையான சட்டவிரோதமான Betting and Match-fixing நீங்கள் நினைக்கிறதை விட அதிகமாக இங்கு நடக்கிறது. இங்கிலாந்து போர்ட்ஸ்மவுத் பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட ஆய்வின் படி டீப் வெப்பில் தேடப்படும் 85% தகவலானது பாலியல் உள்ளடக்கம் (Sexual contents) மற்றும் குழந்தை ஆபாசம் (Child Pornography) தொடர்பானது.

இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம், மேலும் இக்கட்டுரை குறித்த உங்கள் கருத்துக்களை எங்களுக்கு பரிந்துரைக்கவும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்