ஹைக் மெசஞ்சர், உடனுக்குடன் செய்திகளை அனுப்ப உதவும் இந்தியாவை சார்ந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் செயலியாகும், மொபைல் போன்களில் இயங்கக்கூடிய இந்த மென்பொருள், பல்வேறு இயக்கத்தளங்களிலும் இயங்குகிறது.

இதன் மூலம் செய்திகளை அனுப்புவதோடு, உணர்ச்சித்திரங்கள் மற்றும் குரல் செய்திகளை அனுப்ப முடியும்.

இதன் சேவை 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, இதனை பாரதி எண்டர்பிரைசஸ் மற்றும் சாப்ட்பேங்க் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து உருவாக்கினர்.

ஹைக் மெசஞ்சர் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இக்கட்டுரையில் காண்போம்

1. இது 10+ உள்ளூர் மொழிகளில் 14000 க்கும் அதிகமான ஸ்டிக்கர்களைக் கொண்டு உள்ளது.

2. இது ஹைக் வால்லேட் (Hike Wallet) உடன் கூடிய பணம் செலுத்தும் முதல் இந்திய செய்தி பயன்பாடாகும்.

3. இதில் மாதம் சராசரியாக அதிகபட்சமாக 40 பில்லியன் செய்திகள் அனுப்பப்படுகின்றன.

4. இதன் தலைமையகம் புது தில்லி.

5. மற்றொரு நபருக்கு ஹைக் இல்லையென்றாலும், ஹைக் மூலம் நீங்கள் அனுப்பிய செய்தி ஒரு சாதாரண செய்தியாக (Normal text message) வழங்கப்படும். இதற்கு கட்டணம் இல்லை.

6. ஹைக் மெசஞ்சரில் உள்ள NATASHA பற்றி தெரியுமா – இது ஒரு Bot, செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு பயனர்களுடன் தொடர்பு கொள்ளும் ஒரு கணினி நிரலாகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்