டெஸ்லா மோட்டார்ஸ் (Tesla Motors) அமெரிக்காவைச் சேர்ந்த மின்சார வாகனங்கள் (Electric vehicles) மற்றும் சூரிய தகடுகளை (Solar panel) களை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும்.

இந்நிறுவனம் மின் சேமிப்புக் கலன்களையும் (lithium-ion battery) விற்பனை செய்கிறது. 2003-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் தற்பொழுது டெஸ்லா மாடல் S, மாடல் X, மாடல் 3 ஆகிய மூன்று மின்சார கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

எலொன் மசுக் ( Elon Musk) என்பவர் இதன் நிறுவனர் ஆவார்.

இந்த நிறுவனத்தின் முதலாம் வடிவமைப்பு Tesla Roadster வாகனம் தற்பொழுது விற்பனையில் இல்லை.

டெஸ்லா S மாடல், கார் ஆப் தி இயர் விருது பெற்ற முதல் மின்சார கார் ஆகும்.

டெஸ்லாவின் அனைத்து கார் வடிவமைப்புகளும் திறந்த மூலங்களாக (Open source) உள்ளன. மின்சார வாகனங்களின் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்காக 2014 இல் தங்கள் காப்புரிமையை வெளியிட்டது டெஸ்லா நிறுவனம்.

தற்போது பியட், மிட்சுபிஷி, சுசூகி போன்ற கார் நிறுவனங்களைவிட டெஸ்லா அதிக சந்தை மதிப்பினை பெற்றுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்