இந்தியாவில் டெலிகாம் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.

ஜியோவின் வரவுக்குப் பின் ஒவ்வொரு நிறுவனங்களும் சலுகைகளை வாரி வழங்குகின்றன. இவற்றில் ஜியோ, ஏர்டெல், ஐடியா மற்றும் வோடோபோன் நிறுவனங்களுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது.

இந்நிறுவனங்களில் யார் அதிகமான இணைய வேகத்தை வழங்குகின்றார் என்பதை காண்போம்

இந்திய டெலிகாம் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு வாரியமான ட்ராய் (TRAI) வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், டவுன்லோடு வேகத்தில் ஜியோ நிறுவனம் முன்னணியில் இருக்கிறது இதன் சராசரி 4ஜி டவுன்லோடு வேகம் 22.3Mbps,

10 Mbps 4ஜி டவுன்லோடு வேகத்தை கொண்டு ஏர்டெல் நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதற்கடுத்த இடத்தில் முறையே வோடோபோனும், ஐடியாவும் உள்ளன.

அப்லோடு வேகத்தில் ஐடியா நிறுவனம் முன்னணியில் இருக்கிறது, இதன் சராசரி 4ஜி அப்லோடு வேகம் 5.9 Mbps, இதற்கடுத்த இடங்களில் வோடோபோன், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் உள்ளன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்