OnePlus 6T வெளியீட்டு நிகழ்ச்சி வரும் அக்டோபர் 30 ம் தேதி இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுக்கான டிக்கெட் விற்பனையை அறிவித்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

அறிமுக நிகழ்வில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் டிக்கெட்டை OnePlus இந்தியா வலைத்தளத்திலிருந்து வாங்க முடியும். இதன் விலை ரூபாய் 999.

OnePlus இந்தியா வலைத்தளத்திற்கான லிங்க் www.oneplus.in

கூடுதலாக, பயனர்கள் ஒரு பரிசை ஒன்பிளஸ் நிறுவனத்திடம் இருந்து பெறுகிறார்கள், இதில் OnePlus Bullets Wireless Headphones, OnePlus Sketchbook மற்றும் ரூபாய் 999 மதிப்புள்ள voucher போன்றவை அடங்கும். மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அமேசான் இந்தியாவில் வரவிருக்கும் OnePlus 6T க்கான முன்பதிவுகளைத் தொடங்கியுள்ளது.

மேலும் இங்கே தற்போது கசிந்துள்ள OnePlus 6T மொபைலின் சிறப்பு அம்சங்கள் குறித்து காண்போம்.

OnePlus 6T ல் இருப்பது 6.4 இன்ச் 19.5:9 டிஸ்ப்ளே. இதில் AMOLED Full HD+ வகை திரையைப் பயன்படுத்தியிருக்கிறது ஒன்பிளஸ்.

ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தி உள்ளபடி, இதில் கைரேகை சென்சார் இருக்காது அதற்கு பதிலாக In-display Fingerprint சென்சார் கொடுக்கப்படும். ஒன்பிளஸ் நிறுவனம் இதில் Bullets Wireless headphones-ஐ அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதால் OnePlus 6T இல் 3.5mm Headphone Jack இடம்பெறாது.

Qualcomm Snapdragon 845 புராஸசர் இதில் இருக்கிறது. 3.700mAh பேட்டரி பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கொடுக்கப்பட்டுள்ளது. 128GB/256GB இன்டர்னல் மெமரியை கொண்டுள்ளது. மேலும் இது 6 GB ரேம் மற்றும் 8 GB ரேம் என இரண்டு வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்