இந்த ஆண்டு நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை புதுமையான முறையில் கூற விரும்பினால் உங்களுக்காகவே வந்துள்ளது தமிழரால் வடிவமைக்கப்பட்ட Happy Diwali App. இதுவே உலகின் முதல் ஆக்மென்ட்ட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தீபாவளி வாழ்த்துக்கான சிறப்பு செயலி.

அதென்ன ஆக்மென்ட்ட் ரியாலிட்டி

ஆக்மென்டட் ரியாலிட்டி கேமிங் (Augmented reality gaming (AR gaming)) என்பது நிகழ்நேரத்தில் விளையாட்டின் காட்சி மற்றும் ஆடியோ உள்ளடக்கத்தினை பயன்படுத்தும் ஒருங்கிணைப்பாகும். Virtual reality கேமிங்கில் ஒரு ஆழகான சூழலை உருவாக்க தனி அறை அல்லது கட்டுப்படுத்தப்பட்ட பகுதி வேண்டும்,ஆனால் ஆக்மென்டட் ரியாலிட்டி கேமிங்கில் இதற்கென கட்டுப்படுத்தப்பட்ட பகுதி தேவையில்லை, AR கேமிங்கில் மேம்படுத்தப்பட்ட யதார்த்த விளையாட்டு சூழலை அதே உருவாக்குகிறது.

Virtual ரியாலிட்டி விளையாட்டுகளில் சிறப்பு VR ஹெட்செட்கள் தேவைப்படும், ஆனால் ஆக்மென்டட் ரியாலிட்டி கேமிங்கில் அதெற்கென தேவை இல்லை. AR விளையாட்டுகள் பொதுவாக ஸ்மார்ட்போன்கள், டேப்லட்கள் மற்றும் சிறிய கேமிங் அமைப்புகள் போன்ற சாதனங்களில் விளையாடப்படுகின்றன. மேலும் ஆக்மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பம் ஒரு ஸ்மார்ட்போனின் கேமரா, ஜிரோஸ்கோப் (Gyroscope), கடிகாரம் மற்றும் ஜிபிஎஸ் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது

Pokémon GO என்ற விளையாட்டு ஆக்மென்டட் ரியாலிட்டி கேமிங்கில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது. இத்தகைய ஆக்மென்ட்ட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை Happy Diwali App வழியாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்

Step 1: Happy Diwali செயலியை Google Play யிலிருந்து பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைலில் நிறுவிக் கொள்ளவும்.

Step 2: இதில் View Wish என்ற ஆப்ஸனைக் கிளிக் செய்யவும், உங்கள் மொபைலின் கேமரா ஓபன் ஆகும்.

Step 3: அடுத்து தற்போது வெளியான புதிய இந்திய ரூபாய் 10 ஐ எடுத்துக் கொள்ளவும், இதனை உங்கள் மொபைலின் கேமரா வழியாக பார்க்கவும்.

அவ்வளவுதான் 10 ரூபாயில் தீபாவளி வாழ்த்துக்கள் தெரியும்.

ஆண்ட்ராய்டு இயங்கு தளத்திற்கான Happy Diwali செயலியை பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதைப் போன்று இதில் Create wish என்ற ஆப்ஷன் உள்ளது, இதில் நீங்கள் விரும்பும் நபரின் பெயரை டைப் செய்து இதனை வாட்ஸாப் அல்லது பேஸ்புக் வழியாக உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யலாம்.

மேலும் இதில் View friends wish with password என்ற மற்றோரு ஆப்ஷன் உள்ளது, இதில் நீங்கள் உங்கள் நண்பர் அனுப்பிய வாழ்த்தினை ஓபன் செய்ய அவரிடம் இருந்து பெறப்பட்ட Password-ஐ டைப் செய்ய வேண்டும். அடுத்து View wish என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும் உடனே உங்கள் மொபைலின் கேமரா ஓபன் ஆகும். மீண்டும் அதைப் போன்று 10 ரூபாவை எடுத்துக் கொள்ளவும், இதனை உங்கள் மொபைலின் கேமரா வழியாக பார்க்கவும். அவ்வளவுதான் இதில் உங்கள் நண்பர் அனுப்பிய வாழ்த்துக்கள் தெரியும்.

மேலும் இதன் வழிமுறைகளை எளிதாக புரிந்து கொள்வதற்கு இக்கட்டுரையில் இதற்கான Demo Video-வை இணைத்துள்ளேன் பயன்படுத்திக் கொள்ளவும்.

Happy Diwali AR 3D Android App Demo

நாங்கள் பயன்படுத்திய வகையில் இச்செயலி பயன்படுத்த எளிதாகவும் மற்றும் அழகான கிராபிக்ஸ் வடிவமைப்புகளை கொண்டும் உள்ளது. மேலும் இச்செயலி குறித்த உங்கள் கருத்துக்களை எங்களுக்கு பரிந்துரைக்கவும். உங்கள் அனைவருக்கும் எங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்